உதயநிதி அடுக்கடுக்கான கேள்வி
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
தவெக ஆட்சியின் 116 நாட்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், பற்றி கேள்வி எழுப்பிய அவர், இவற்றுக்கு எல்லாம் முதல்வர் பதிலளிப்பாரா என்று வினவினார்.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பற்றிய கேள்விகளுக்கு பழிபோடுதல், திசை திருப்பாமல் முதல்வர் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கிறேன். திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்ததாக தவெக அரசின் கொள்கை விளக்க குறிப்பே கூறுகிறது.
அதிக திட்டங்கள் ரத்து
தவெக அரசு பெறுப்பேற்றது முதல் புதிய திட்டங்களை விட ரத்து செய்த திட்டங்கள் அதிகம். திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததை ஒப்புகொண்டமைக்கு நன்றி..
ரிவர்ஸ் கியரில் தமிழகம்
மேலும், தி.மு.க ஆட்சியில் டாப்கியரில் சென்ற தமிழ்நாடு த.வெ.க ஆட்சியில் ரிவர்ஸ் கியரில் செல்கிறது. த.வெ.க அறிவித்த வாக்குறுதிகளை முழுமையாக செயல்படுத்தவில்லை. பாதியாக செயல்படுத்துவதாக அறிவிப்பு மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள்.
திட்டங்களை விமர்சித்த உதயநிதி
த.வெ.க அரசின் மொத்த திட்டங்களுக்கும் சேர்த்து தாய்மாமன் காது குத்தும் திட்டம் என பெயர் வைக்கலாம். திட்டங்கள் மக்களை சென்றடைவதை விட ரீல்ஸ் மட்டும் சென்றடைந்தால் போதும் என நினைக்கிறார்கள்.
இஸ்லாமிய கைதிகள் விடுதலை
காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை படிப்படியாக செயல்படுத்த வேண்டும் என்றும் தி.மு.க அரசு செய்ததுபோல் நீண்டநாள் சிறையில் இஸ்லாமிய கைதிகளுக்கு நீண்ட விடுப்பு வழங்க வேண்டும் . தமிழ்நாட்டில் கொலை நடக்காத நாட்களே இல்லை என்ற நிலை உள்ளது.
ரத்தம்? தக்காளி சட்னி?
எங்களுக்கு வந்தா ரத்தம், அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? முதல்வரை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களை கைது செய்வதில் தவெக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முதல்வரை நேரடியாக விமர்சிக்கும் பாஜக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
அனிதா நினைவேந்தலுக்கு கூட தவெக அரசு அனுமதி தரவில்லை; அனுமதியின்றியே நிகழ்ச்சி நடந்தது. இடதுசாரிகளை கணக்கெடுக்க வட்டாட்சியர் உத்தரவிட்டது தலைமைச் செயலாளர் உத்தரவுப்படி நடந்ததாக புகார் அளிக்கப்பட்டது.
முதல்வர் விஜய் பதில்
இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “அனைத்து கேள்விகளுக்கும் திங்கள்கிழமை பதிலளிப்பேன். நான் இங்கு இல்லை என்றாலும், இங்கு எழுப்பப்படும் அனைத்து கேள்விகளையும் நான் அறிவேன்.
ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன், நான் பதிலளிக்கும் போது யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது” என்று கூறினார்.
======