CM Vijay to Attend Sonia Gandhi's Book Launch; Modi Meeting Rumours Surface Google
தமிழ்நாடு

சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா. டெல்லி செல்லும் முதல்வர் விஜய்! மோடியை சந்திப்பாரா...?

சோனியா காந்தியின் அழைப்பை ஏற்று டெல்லி செல்லும் முதல்வர் விஜய்... ராகுல் காந்தியுடனான சந்திப்பு மற்றும் மெகேதாட்டு அணை விவகாரம் குறித்து அரசியல் எதிர்பார்ப்பு...

NARENDRAN K

சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா :

தமிழக அரசியலில் இப்போ ஒரு முக்கியமான நகர்வு நடக்கபோகுது தமிழக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கு.

அதுவும் சாதாரண பயணம் கிடையாது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காகத்தான் விஜய் டெல்லி செல்ல இருக்கிறார்.

சோனியா காந்தி எழுதியுள்ள Belonging A Journey of Love என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நவம்பர் 16-ம் தேதி மாலை 6 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.

விஜய் காங்கிரஸ் உறவில் முக்கியத்துவம் :

இந்த பயணத்தில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, விஜய்க்கு சோனியா காந்தி நேரடியாக அழைப்பு விடுத்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், ராகுல் காந்தியும் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் டெல்லி சென்றிருந்தபோது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்திருந்தார்.

மெகேதாட்டு அணை விவகாரம் மோடியை சந்திப்பாரா விஜய்?

இதற்கிடையில் விஜய்யின் டெல்லி பயணத்தில் இன்னொரு முக்கியமான விவகாரமும் கவனம் பெற்றிருக்கிறது. அதுதான் மெகேதாட்டு அணை விவகாரம்.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மெகேதாட்டு அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தின் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

ஒரே நாள் பயணம் அரசியல் எதிர்பார்ப்பு :

இன்று மதியம் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்லும் விஜய், மாலை நடைபெறும் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறார்.

நிகழ்ச்சி முடிந்ததும் இரவு மீண்டும் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

=========================