cm Vijay visit Karur in July? He is set to meet the families of the bereaved in person to offer condolences.  google
தமிழ்நாடு

ஜூலையில் கரூர் செல்லும் முதல்வர் விஜய்? : இழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்...

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கு உயிரிழந்தவர்களின் ,குடும்பங்களை நேரில் சந்தித்து முதல்வர் விஜய் ஆறுதல் கூற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

Rohini

ஜூலையில் கரூர் செல்லும் முதல்வர் விஜய்

வரும் ஜூலை 2ம் வாரத்தில் முதல்வர் விஜய் கரூர் செல்ல இருப்பதாக தகவலகள் தெரிவிக்கின்றன,கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்

கடந்த ஆண்டு செப். 27 ஆம் தேதி, தேர்தல் பிரசாரத்திற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் சென்றபோது பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதுமே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. விஜய்யும் நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது .

முதல்வராக நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருக்கும் முதல்வர்

கரூர் துயர சம்பவம் ஏற்பட்ட பிறகு ,பல்வேறு பாதுகாப்பு காரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்க முடியாமல் போகவே, அதன்பின்னர் கடந்த 2025 அக்டோபர் 27 ஆம் தேதி, அதாவது சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்த குடும்பங்களை சென்னைக்கு அழைத்து மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசினார் விஜய்.

அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது இந்த நிலையில் முதல்வராக விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாக தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது

கரூருக்கு வந்து உங்களை நேரடியாக சந்திப்பேன், முதல்வர்

கரூருக்கு வந்து உங்கள் அனைவரையும் நேரடியாகச் சந்திப்பேன் என்றும் விஜய் முன்னரே கூறியிருந்த நிலையில், தற்போது முதல்வரான பிறகு இந்த பயணம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனிடையே கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை இன்று ராஜிநாமா செய்துள்ளதும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அவர் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

==============