மாதவரம் பால் பண்ணையில் விஜய்
இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு பிறகு முதலமைச்சர் விஜய், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். மாதவரத்தில் ஆவின் பால்பண்ணை அமைந்துள்ளது.
அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்வர் விஜய் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தாங்க.
மைய ஆய்வக கட்டிடம் திறப்பு
ஆவின் வளாகத்தில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள 'ஆவின் மாநில மைய ஆய்வகம்'துணை கட்டிடத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.
பால் பொருட்களின் தரம் ஆய்வு
ஆவின் நிறுவனம் மூலம் பொதுமக்கள் மற்றும் நுகர்வோருக்கு விநியோகிக்கப்படும் பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட அனைத்து வகையான பால் உபபொருட்களின் தரம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தன்மையை நவீனத் தொழில்நுட்பத்துடன் பரிசோதிக்க அதிநவீன ஆய்வகம் வழிவகுக்கும்.
விவரங்களை கேட்டறிந்த முதல்வர்
ஆய்வகத்தின் புதிய உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், கிராமப்புற விவசாயிகளிடமிருந்து நாள்தோறும் கொள்முதல் செய்யப்படும் பாலின் தரம் எவ்வாறு பரிசோதிக்கப்பட்டு வகைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார்.
மேலும், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஊர்களில் இருந்து குளிரூட்டப்பட்ட லாரிகள் மூலமாகப் பால் பாதுகாப்பாகக் கொண்டு வரப்படும் நடைமுறைகள் குறித்தும் ஆவின் உயர் அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்து கலந்தாலோசித்தார்.
அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை
பொதுமக்களுக்குத் தரமான பால் பொருட்கள் தடங்கலின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் ஆவின் துறை அதிகாரிகளும் அரசு உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
ஆவின் பண்ணையில் இருந்து கிளம்பிய பிறகு, சாலையில் திரண்டிருந்த மக்களை நேரில் சந்தித்து முதல்வர் விஜய் உரையாடினார்.
=========