cm Vijay,announced special 'Kuruvai' package scheme implemented in 2026 at a cost of ₹134.83 crore, increasing paddy google
தமிழ்நாடு

”திறக்கப்படாத மேட்டூர் அணை, ஏமாற்றத்தில் டெல்டா மாவட்டங்கள்” : ரூ.134.83 கோடி யில் குறுவை சிறப்புத் திட்டம்:CM விஜய்!

குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பிலான தொகுப்பு திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்து இருக்கிறார்.

Rohini

ஏமாற்றத்தில் டெல்டா மாவட்டங்கள்

தென்மேற்கு பருவமழையின் விகிதம் இந்த ஆண்டு இயல்பை விட குறைவான மழைப்பொழிவையே தரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது .

இந்த நிலையில் குறைவான மழைபொழிவை கிலைக்கும் காரணத்தினால் , வழக்கமாக சாகுபடிக்காக திறக்கப்படும் , மேட்டூர் அணையானது இந்த ஆண்டு திறக்கப்பட வில்லை , இதனால் விவசாயத்தயே நம்பி இருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

முதல்வர் விஜயின் அறிவிப்பு

காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, கார் மற்றும் சொர்ணவாரிப் பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியை மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026-ஆம் ஆண்டில், 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்

நெல் சாகுபடியில் முதன்மை வகிக்கும் டெல்டா

தமிழ்நாட்டில் சராசரியாக 52.72 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும், கடலூர் திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நெற்பயிரே முதன்மையாக சாகுபடி செய்யப்படுகிறது.

குறுவை சாகுபடிக்காக நிதி ஒதுக்கீடு : முதல்வர்

வடிமுனைக் குழாய்களைக் கொண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக 77.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார். குறுவை மற்றும் சொர்ணவாரி நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக 57.33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் என மொத்தம் 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தில், நெல் இயந்திர நடவு / நேரடி நெல் விதைப்பிற்கான ஊக்கத்தொகை, உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் விநியோக மானியம் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட

தெல் இரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை ஆகிய இனங்களுக்கு 134.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடாக டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களின் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் முதலமைச்சர் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

நீர் அதாரங்கள் தூர் வாரப்படும் , தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்

வேளாண் பொறியியல் துறை வாயிலாக டெல்டா மாவட்டங்களில் உள்ள 2,325 கி.மீ. நீளமுள்ள C மற்றும் D வாய்க்கால்கள் 10 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்பட்டுள்ளன, மேலும், நீர்வளத்துறை மூலமாக 100 கோடி ரூபாய் செலவில் 4.971 கி.மீ. நீளமுள்ள A மற்றும் B வாய்க்காங்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை 97 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளன.

மேலும், குறுவை சாகுபடிக்கு 10.714 மெட்ரிக் டன் நெல் விதைகள் மற்றும் 4.02 இலட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணிநேரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்