மாணவின் இறப்பின் பின்னணி என்ன?
கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர் அமுதன், சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் , இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது
மாணவன் கொலை வழக்கு , 5 பேர் கைது
கல்லூரி மாணவன் கொலை வழக்கில் இதுவரை 14 சிறுவன் உட்டபட 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் விவகாரம் தொடர்பாகச் சக நண்பர்களைக் காட்டிக்கொடுத்ததாகக் கூறி, நண்பர்களே அமுதனைத் தாக்கிப் படுகொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
இது குறித்து வழக்குபதிவு செய்து காவல் துறை விசாரணை
மாண்வன் கொலை வழக்கு சம்மந்தமாக மாவட்ட எஸ்பி பவன்குமார் உத்தரவின்பேரில், செட்டிபாளையம் ஆய்வாளர் செல்வராகவன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இந்த வழக்கில் அரவிந்த், சிவரோகித், ஆறஅமுதன், மணிபாலா மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள இவர்களது கூட்டாளிகள் சிலரைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சட்டப்பேரவையில் ஒலித்த மாணவரின் உயிரிழப்புக்கு எதிரான திமுகவின் குரல்
தமிழக சட்டப்பேரவையில் ,கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலைக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி கோரிக்கையை முன்வைத்தார்
மாணவர் கொலை, தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்
போதைப்பொருட்கள் பற்றி புகார் அளித்தவர் விவரத்தை போலீசார் கொடுத்ததால் கொலை நடந்துள்ளது. கோவை மாணவர் அமுதன் கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். கோவை கல்லூரி மாணவர் கொலையில் காவல்துறை அலட்சியமே என சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்
=================================