குற்ற பின்னணி
கோவை பீளமேட்டில் தா ஆண்நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி 3 நபர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்.
இதில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த கருப்பசாமி (30), அவரது சகோதரர் காளீஸ்வரன்(21), மதுரையை சேர்ந்த அவர்களது உறவினர் தவசி(20) உள்ளிட்ட 3 பேரை போலீசார் காலில் சுட்டுப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீதிமன்ற தீர்ப்பு
அதன்படி குற்றாவளிகள் மூவர் 250 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 72 பேரிடம் சாட்சி விசாரணை நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 27ம் தேதி முடிவடைந்தது இன்று இறுதி தீர்ப்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டிருக்கிறது .
மூவரும் குற்றாவளிகள் :சாகும் வரை ஆயுள்தண்டனை
மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது . குற்றத்தில் தொடர்புடைய கருப்புசாமி, காளீஸ்வரன், தவசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றாவளிகள் என உறுதி செய்து சகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.