Communist Party of India decided to contest local body elections independently in order to gauge its true strength AI generated
தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் : பலத்தை அறிய கம்யூனிஸ்ட்கள் ஆர்வம் : தனித்து போட்டியா? : CPI வீரபாண்டியன் விளக்கம்...!

தங்களுடைய உண்மையான பலத்தை அறிந்து கொள்ளும் வகையில், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளது.

Kannan

இடதுசாரி கட்சிகள்

தமிழக சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்று தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன.

108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக ஆட்சி அமைக்க திணறிய போது, இடதுசாரிகள், காங்கிரஸ், விசிக ஆதரவு தந்து விஜய் முதல்வராக உதவின.

தவெக அரசுக்கு ஆதரவு

காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆட்சியில் அங்கம் வகிக்க, கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் வெளியில் இருந்து ஆதரவு தருகின்றன.

இதுவரை நீடித்து வந்த திமுக கூட்டணியில் இனி இடதுசாரி கட்சிகள் தொடராது என்றும், அக்கூட்டணியில் இருந்து தாங்கள் முழுமையாக விலகிவிட்டதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டன.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்

தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் சூழல் அடியோடு மாறிவிட்ட நிலையில், இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் நிலைப்பாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தங்களது கூட்டணியின் நிலைப்பாடு மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தான கட்சியின் கொள்கை முடிவுகளை தெளிவுபடுத்தியுள்ளார்.

உண்மையான பலம் என்ன?

“இடதுசாரி கட்சிகளின் உண்மையான பலத்தை அறிய வேண்டிய தேவை நமக்கு உள்ளது. எனவே, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவோம்.

காங்கிரஸ், விசிக?

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை” என்று மு.வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே, வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ், விசிக தவெக அரசில் அங்கம் வகிப்பதால், அவர்கள் என்ன நிலைப்பாடு எடுப்பார்கள் எனத் தெரியவில்லை.

===================