தமிழக சட்டமன்ற தேர்தல்
Congress take an important decision today after consulting with Tamil Nadu executives, to contiune in dmk alliance or alliance with TVK : தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு, வரும் பிப்.3-வது வாரத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது. ஏனவே, தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளான திமுக, அதிமுகதேர்தலை எதிர்கொள்வதற்கான திட்டமிடல் மற்றும் கூட்டணி தொடர்பாக முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன.
ஆட்சியில் பங்கு - காங்கிரஸ் போர்க்கொடி
இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியில் கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என்ற குரல் சத்தமாக ஒலிக்க தொடங்கி இருக்கிறது. முதலில் சமூக வலை தளங்களில் பதவிடப்பட்ட கருத்துகள், தற்போது எம்பிக்கள் வரை நேரடியாக பேசுவது, ட்விட்டரில் பதிவிடுவது என நீள்கிறது.
அதிருப்தியில் திமுக தலைமை
இதுபோன்ற நடவடிக்கையால் திமுக தலைமை அதிருப்தியில் உள்ளது. அதே நேரத்தில், எந்த கட்சியாவது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என சொல்லுமா என அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரின் கருத்தை எப்படி புறந்தள்ள முடியும் என காங்கிரஸார் கேள்வி எழுப்புகின்றனர்.
சோனியா, ராகுல் ஆலோசனை
இந்தச் சூழலில் தமிழக சட்டசபை தேர்தல் ஆயத்த கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெறுகிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் தலைமையில், தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
தமிழக தலைவர்கள் பங்கேற்பு
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் எம்பிக்கள் 10 பேர், எம்எல்ஏக்கள் 17 பேர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொள்கிறார்கள்.
அதிக இடங்களா? புதிய கூட்டணியா?
இந்தக் கூட்டத்தில், திமுக கூட்டணியில் அதிக இடங்கள், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்று பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்த இருப்பதாக தெரிகிறது. அதற்கு, திமுக ஒப்புக் கொள்ளாவிட்டால், தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
காங்கிரசில் மாறுபட்ட கருத்து
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் மட்டுமே திமுக கூட்டணியில் தொடர விரும்புவதாகவும், எம்பிக்களில் பெரும்பாலானோர் தவெக கூட்டணிக்கு செல்வதன் மூலமே கட்சியை அடுத்தநிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்பதில் உறுதியுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .
19ம் தேதி சென்னையில் ஆலோசனை
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தெரிவிக்க 19-ம் தேதி பொதுக்குழு, செயற்குழு சென்னையில் கூடுகிறது. இதில் தேர்தல், கட்சி வளர்ச்சி,குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
================