deadlock over selection of Congress candidates, Manickam Tagore has resigned from the post of Election Management Chief https://x.com/manickamtagore
தமிழ்நாடு

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் இழுபறி : மாணிக்கம் தாகூர் அதிருப்தி : ”தேர்தல் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா”!

Congress MP Manickam Tagore Resigned From Election Duty : காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிக்கும் நிலையில், தேர்தல் மேலாண்மை தலைவர் பதவியில் இருந்து மாணிக்கம் தாகூர் ராஜினாமா செய்துள்ளார்.

Kannan

தமிழக காங்கிரஸ் கமிட்டி

Congress MP Manickam Tagore Resigned From Election Duty : திமுக கூட்டணியில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கடந்த முறையை விட கூடுதலாக 3 சீட்களை பெற்ற காங்கிரஸ், 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டு, பிரசாரத்தை தொடங்கி விட்டன.

கோடிகளுக்கு விலைபோன சீட்கள்

ஆனால், காங்கிரசில் மட்டும் வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிக்கிறது. காங்கிரஸ் சீட்களை கட்சியின் தமிழக தலைவர்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்த நிலையில், அதுபற்றி எம்பி ஜோதிமணி பகிரங்கமாக பதிவிட்டு அதிரடி கிளப்பினார்.

மாநகர பகுதிகளில் 5 கோடி வரையும், ஊரக பகுதிகளில் 3 கோடி வரையும் சீட்கள் விலைபோனதாக டெல்லி வரை புகார் போயிருக்கிறது.

தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படும் வேட்பாளர் பட்டியலிலும், ஒரு தொகுதிக்கு ஒரு பெயர் மட்டுமே இருப்பதால், ராகுல் காந்தி கொந்தளித்து போயிருக்கிறார்.

புது முகங்களுக்கு வாய்ப்பு - ராகுல்

அந்த லிஸ்ட்டை கிழித்தெறிந்த அவர், குறைந்தது இரண்டு பேர்களாவது இடம்பெற்று இருக்கும் வகையில் புதிய பட்டியலை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் ராகுல் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுவதால், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கடைசிவரை பிரச்னை தான்

வேட்புமனு தாக்கல் 3 நாட்கள் தான் இருக்கிறது. இன்னும் வேட்பாளர் தேர்வு பிரச்னை தீர்ந்தபாடில்லை. தேர்வு செய்யப்படும் வேட்பாளர், வேட்புமனு தாக்கல் செய்து விட்டு, கூட்டணி கட்சியினரோடு இணைந்து பிரசாரம் செய்ய வேண்டும்.

தொகுதி முழுவதும் அறிமுகம் ஆக வேண்டும். இதற்கு எல்லாம் 3 வார காலம் தான் இருக்கிறது. திமுக முழுமையாக ஒத்துழைத்தால் மட்டுமே, வெற்றி பற்றி யோசிக்க முடியும்.

அதிருப்தியில் மாணிக்கம் தாகூர்

இப்படிப்பட்ட இடியாப்ப சிக்கலில் தவிக்கிறது தமிழக காங்கிரஸ். இந்தநிலையில், அக்கட்சியின் எம்பியான மாணிக்கம் தாகூர், தனக்கான பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்.

தேர்தல் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா

வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் குழப்பத்தால் அவர் அதிருப்தி அடைந்து இருப்பதாக தெரிகிறது.

தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவியை வகித்து வந்த மாணிக்கம் தாகூர், அந்தப் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார்.

இதற்கான கடிதத்தை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

====