Cooking gas cylinder price hike due to war: Rs 100 subsidy promised by DMK government? Annamalai criticism  google
தமிழ்நாடு

போர் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு : திமுக கூறிய ரூ.100 மானியம் எங்கே! அண்ணாமலை கேள்வி

தொடர்ந்து நீடித்து வரும் வரும் ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக சமையல் எரிவாயுவிற்கான உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தட்டுபாடு காரணமாக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

Rohini

ரூ.100 மானியம் :அண்ணாமலை விமர்சனம்

திமுக தனது கடந்த 2021ம் ஆண்டில் தேர்தல் வாக்குறுதி எண் 503ல், சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தது . ஆனால், ஐந்து ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் அதனை நிறைவேற்றவில்லை.

பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு இபபோதாவது சிலிண்டருக்கு ரூ.100 மானியத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், துன்று அண்ணாமலை கூறியுள்ளார்.

பயன்பாடு அதிகரிப்பால் :இறக்குமதியும் அதிகரிப்பு

நாடு முழுவதும், கடந்த 10 ஆண்டுகளில், கேஸ் பயன்பாட்டிற்கான தேவை 45% அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி கொண்டு வந்த உஜ்வாலா இலவச காஸ் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களால்

கடந்த 10 ஆண்டுகளில் கேஸ் இணைப்பு, 14 கோடி வீடுகளில் இருந்து, சுமார் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து தற்போது 33 கோடிக்கும் அதிகமான கேஸ் இணைப்பு பயன்பாடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்றப்படாத வாக்குறுதி

திமுக தனது கடந்த 2021ம் ஆண்டில் தேர்தல் வாக்குறுதி எண் 503ல், சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்ற வாக்குறுதியயை ஐந்து ஆண்டுகளைக் கடந்தும்,இன்னும் நிறைவேற்றப்படாதது மக்களை ஏமாற்றும் செயல் என்று கூறியுள்ளது.