தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கெனவே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில், விசாரணையைத் தொடர்ந்து நடத்துவதற்காக அவரது போலீஸ் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 1,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், DTCP, CMDA உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணம் எங்கு சென்றது, யார் யாருக்குத் தொடர்பு உள்ளது, அன்பில் மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துகள் தொடர்பான விவரங்கள் என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போலீஸ் காவலில் விசாரணை நடத்தும்போது அன்பில் மகேஷுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தல் அளிக்க கூடாது என்றும், உரிய உணவு மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்துள்ளது.
மேலும், அவரது வழக்கறிஞர் தினமும் அவரை சந்திக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளன.
அன்பில் மகேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இந்த பண பரிவர்த்தனைகளில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, பணம் எங்கு சென்றது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
====
=======================