CPI Allocated 5 Constituencies in DMK Alliance! Why the Consent? M. Veerapandian Explains  source: google
தமிழ்நாடு

திமுக கூட்டணியில் இந்திய கம்யூ. கட்சிக்கு 5 தொகுதிகள்! : ஒப்புக் கொண்டது ஏன்? : வீரபாண்டியன் விளக்கம்!

CPI allocated 5 seats in DMK alliance 2026 : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

S Kavitha

CPI allocated 5 seats in the DMK alliance:

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு முதலான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

திமுக கூட்டணியில் 21 கட்சிகள்

அதன்படி திமுகவும் கூட்டணியில் உள்ள 21 கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கெனவே, காங்கிரஸ், மதிமுக, இந்தியன் முஸ்லீம் லீக் , கொ.ம.தே.க , மமக கட்சிகளுடனான கூட்டணி, தொகுதி பங்கீடுகளை திமுக உறுதி செய்த நிலையில், தற்போது இந்திய. கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதி பங்கீடை உறுதி செய்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தொடர்ந்து, திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீடு ஒப்பந்தம்

தொகுதி பங்கீடு குறித்தான ஒப்பந்தம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் மு. வீரபாண்டியன், முன்னாள் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் முன்னிலையில் கையெழுத்தானது.

4 கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

6 தொகுதியில் இருந்து 5 தொகுதியாக குறைப்பு

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட நிலையில் இந்த முறை 5 இடங்களில் போட்டியிட உள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள்

முன்னதாக திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28, மதிமுகவிற்கு 4 தொகுதிகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ,

மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சிபிஐ கட்சிக்கு 5 தொகுதிகள் என திமுக கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது.

5 தொகுதிகளுக்கு சம்மதம் ஏன்? மு.வீரபாண்டியன் விளக்கம்

தொகுதி பங்கீடு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் மு. வீரபாண்டியன் பேசும்போது, கூடுதல் இடங்கள் வேண்டும் என்று கேட்டோம் அதற்கான தார்மீகம் கம்யூ. கட்சியிடம் உள்ளது, வரும் சட்டமன்ற எண்ணிக்கையை வைத்து எங்களை மதிப்பிடக் கூடாது என்று கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

மேலும் எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து இருப்பதால், முதல்வர் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், 5 இடங்களை ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக விளக்கமளித்துள்ளார்.