https://x.com/Shanmugamcpim
தமிழ்நாடு

பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர திமுக தயங்குவது ஏன்?

பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர திமுக அரசு தயக்கம் காட்டுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் குற்றம்சாட்டினார்.

MTM

மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்ற பாஜக மற்றும் திமுக அரசுகளை வலியுறுத்தி ஜூன் 11 - 20 வரை தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி பிரசாரம் மேற்கொண்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், பட்டியலின மக்களின் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் ஆணையிட்டும் அரசு நிலத்தை மீட்டு தர திமுக அரசு மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், விவசாயிகளின் அனுபவ நிலங்கள், ஏழைகளின் வீடுகளுக்கு பட்டா கொடு என்று கேட்டால் அவதூறு பரப்புகிறார் என்கிறார்கள். எனக்காகவா பட்டா கேட்டேன். மக்கள் நலன் சார்ந்து வைக்கும் கோரிக்கையை புரிந்து கொள்ளாமல் அவதூறு பரப்புவது ஏன் என்றும் அவர் கேட்டார்.

பட்டா இல்லாத குடியிருப்புகளே தமிழகத்தில் இல்லை என்றால் அது திமுக அரசுக்குதானே பெருமை என்றும் பெ.சண்முகம் குறிப்பிட்டார்.