மேகமலை நில விவகாரத்தின் பி்ன்னணி என்ன?
மேகமலை - வருசநாடு உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் 98 கிராமங்களில் 100 வருடங்களாக வன நிலங்களில் குடியிருந்து, விவசாயம் செய்து வரும் பழங்குடியின குடும்பங்கள் ,5000 ஹெக்டேர் பரப்பளவு மலைப்பகுதி ஆக்கிரமித்துள்ளதாகவும் வனத்துறையின் அனுமதியின்றி அங்கு சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் செயல்படுவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கூறியதாவது
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அங்குள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டு இது தொடர்பான அறிக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது
உச்சநீதிமன்றம் கடந்த மே 29, 2026 அன்று வெளியிட்ட உத்தரவில், காடுகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதும், அவர்களை வெளியேற்றுவதும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். மனிதாபிமான் காரணங்களைக் காட்டி ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளைக் காலவரையின்றி தாமதப்படுத்தக் கூடாது. என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தது
நீதிமன்றம் கூறிப்பிட்டுள்ளதாவது
வனப்பகுதிகளுக்குள் அமைந்துள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்களை வன நிலத்திலிருந்து ஆறு மாத காலத்திற்குள் அகற்றப்பட வேண்டும்.
ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதிகளில் மின்சாரம், சாலை வசதி, போக்குவரத்து மற்றும் பிற அரசு நலத்திட்டங்களை வழங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது
இந்த உத்தரவுகளை மாநில அரசு நிறைவேற்றத் தவறினால், ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை ராணுவப் படையை ஈடுபடுத்த சிஇசி பரிந்துரைக்கலாம். என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது
உச்சநீதிமன்ற அறிவிப்பு , வாழ்வாதாரப் பாதிப்பில் மக்கள்
உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியையும் , அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று அப்பகுதி மக்கள், உச்சநீதிமன்ற அறிவிப்பால் கொந்தளிப்பில் உள்ளனர்
உத்தரவை கைவிட கோரி மக்கள் போராட்டம்
உச்சநீதிமன்றத்தின் மேகமலை மலைவாழ் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடக் கோரி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 98 மலைக்கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புலிகள் காப்பகம் என்ற பெயரில் மேகமலை மலைவாழ் மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சீராய்வு மனுதாக்கல் செய்யக்க செய்யக் கோரி மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது
தமிழக அரசு தலையிட வேண்டும் - சிபிஎம்
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது அங்கு வசித்து வரும் குடும்பங்களுக்கும் , பழங்குடியினருக்கும் , 2006 வன உரிமைச் சட்டத்தின்படி வீட்டுமனைப்பட்டா மற்றும் நிலப்பட்டா வழங்க வேண்டும் மேலும் நீதிமன்ற உத்தரவை முழுமையாக ரத்து செய்யத் தமிழக அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியும் , தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய போராட்டத்தையிம் முன்னெடுத்தனர்
அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது
இது விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் மக்களை வெளியேற்றாமல் இருக்க உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும், அதுவரை எவ்வித வெளியேற்றமும் இருக்காது என்றும் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது
==================================
மேகமலை - வருசநாடு உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் 98 கிராமங்களில் 100 வருடங்களாக வன நிலங்களில் குடியிருந்து, விவசாயம் செய்து வரும் குடும்பங்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும், 2006 வன உரிமைச் சட்டத்தின்படி வீட்டுமனைப்பட்டா மற்றும் நிலப்பட்டா வழங்க வேண்டும். மேலும், நீதிமன்றம் விவசாயிகளை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்ற வனத்துறை மற்றும் அனைத்துத் துறைகளின் மூலம் எடுக்கப்பட்டு வரும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளைப் பாதுகாக்க, இந்த நீதிமன்ற உத்தரவை முழுமையாக ரத்து செய்யத் தமிழக அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் உள்ளிட்ட இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 7 தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் வன உரிமைக் குழுக்கள் (கடமலை மயிலை) சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் திரள் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் விளைவாக, இன்று தேனி உள்ளிட்ட வனப்பகுதிகளில் தலைமுறைகளாக வாழ்ந்து வரும் விவசாயிகளையும் பழங்குடி மக்களையும் உடனடியாக வெளியேற்றாமல், தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும், அதுவரை எவ்வித வெளியேற்றமும் இருக்காது என்றும் அறிவித்த அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்து இருக்கிறார்.