வழக்கு சிபிஐக்கு மாற்றம் :
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை தமிழக அரசு சிபிஐ, விசாரணைக்கு மாற்றி உள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு, மக்களின் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் இந்த முடிவுக்கு திமுக அரசு வந்தது.
மாணவி விவகாரத்தில் அவசரம் காட்டவில்லை :
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ” திருப்புவனம் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐ. விசாரணைக்கு தமிழக அரசு மாற்றி இருப்பதை வரவேற்கிறோம். அதேசமயம், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், நீதிக்காக காத்திருந்த போது, திமுக நிர்வாகியான ஞானசேகரனுடன் தொடர்புடைய அனைவரையும் கண்டுபிடிப்பதில் இதே அவசரமும் அர்ப்பணிப்பும் ஏன் காட்டப்படவில்லை என்பது வியப்பளிக்கிறது.
கள்ளச்சாராய பலி வழக்கில் எதிர்ப்பு :
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் வழக்கு விசாரணையை கடந்த ஆண்டு சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியதை எதிர்த்து இதே திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
தற்போது என்ன மாறிவிட்டது?. சட்டசபை தேர்தல் நெருங்குவதால், பாரபட்சமற்ற விசாரணை என்ற எண்ணம் திமுகவுக்கு தோன்றுகிறது. தேர்தல் பயம் காரணமாகவே இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது,” இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.
=====