Cyber ​​police are investigating who posted the Janyayan image online google
தமிழ்நாடு

"ஜனநாயகன் பட விவகாரம்" : சைபர் கிரைம் விசாரணை : BJPக்கு தொடர்பில்லை, முட்டிக்கு முட்டி தட்டுங்க : அண்ணாமலை ஆவேசம்!

ஜனநாயகன் படத்தை இணையத்தில் வெளியிட்டது யார் என்பது குறித்து சைபர் போலீசார் விசாரணைய மேற்கொண்டு வருகிறார்கள்.

Kannan

விஜயின் ஜனநாயகன்

Jananayagan film piracy issue, Cyber Police Investigation : தமிழக வெற்றி கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராகி இருந்த படம் ஜனநாயகன். இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

சென்சார் போர்டு பிரச்னை

சென்சார் போர்டு விவகாரம் தீவிரமடைந்து, நீதிமன்றம் வரை சென்று படம் ரிலீசாவது தள்ளிப் போனது.

தேர்தலுக்கு பிறகே ஜனநாயகன் வரும் என்று கூறப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் படத்தின் சில காட்சிகள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.

முழு படமும் வெளியானதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பு குழுவினர் தெரிவித்தனர்.

பொதுமக்கள் யாரும், இணையத்தில் கசிந்த காட்சிகளை டவுன்லோடு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.

சைபர் போலீசார் விசாரணை

இந்த விவகாரத்திற்கு அரசியல் மற்றும் திரை பிரமுகர்கள் உட்பட பலரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த சூழலில்தான் படத்தை இணையத்தில் வெளியிட்டது யார் என்பது குறித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணாமலை விளக்கம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “ ஜனநாயகன் விவகாரத்தில் பாஜகவிற்கு எந்த தொடர்பும் இல்லை என்றார்.

தான் தியேட்டரில் போய் தான் படம் பார்ப்பேன் என்று கூறிய அவர், ஆதவ் தேவையில்லாமல் மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக மீது குற்றம் சுமத்துகிறார்.

அரசியலுக்காக புகார் சொல்லாதீங்க

போஸ்ட் புரொட்ஷன் பணிகளை செய்த நிறுவனம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

தப்பு செய்தவர்களை முட்டிக்கு முட்டி தட்டுங்க. அரசியல் லாபத்திற்காக பாஜகவை இழுக்க வேண்டாம்” என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.

=======

====================