Cyclone Ditwah approaches Tamil Nadu, warning issued for extremely heavy rains in 6 districts  IMD Chennai
தமிழ்நாடு

Cyclone : தமிழகத்தை நெருங்கும் 'டிட்வா' புயல் : நாளை ரெட் அலெர்ட்

Cyclone Ditwah Update in Tamil Nadu : டிட்வா புயல் தமிழகத்தை நெருங்குவதால், இன்றும், நாளையும் 6 மாவட்டங்களுக்கு அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Kannan

வங்கக் கடலில் டிட்வா புயல்

Cyclone Ditwah Update in Tamil Nadu : வங்கக் கடலில் இலங்கை அருகே உருவான டிட்வா புயல், சென்னையில் இருந்து 520 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சில மணி நேரம் வேகமெடுத்தும், சில சமயம் வேகம் குறைந்தும் போக்குக்காட்டி வருகிறது புயல்.

சென்னையை நெருங்கும் புயல்

இந்தப் புயல் சென்னை அருகே கரையை கடக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எங்கு கரையை கடக்கும் - சஸ்பென்ஸ்

வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி டிட்வா புயல் நகரும் என கூறப்படும் நிலையில், 30ம் தேதி சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலின் நகர்வு மாறுபட்டால், தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கலாம்.

6 மாவட்டங்கள் - அதி கனமழை

புயல் காரணமாக திருவாரூர், நாகப்பட்டினத்தில் இன்றும், நாளையும்(Red Alert in Tamil Nadu Districts) அதிகனமழை பெய்ய வாய்ப்பு என்றும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்கள் - ஆரஞ்ச் அலெர்ட்

ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும், ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

========