Cyclone Sennyar, which formed in the Strait of Malacca near the Andamans, will not have a major impact on Tamil Nadu. 
தமிழ்நாடு

மலாக்கா ஜலசந்தியில் 'சென்யார்' புயல்: கடலோர தமிழகத்தில் மிதமான மழை

அந்தமான் அருகே மலாக்கா ஜலசந்தியில் உருவான சென்யார் புயலால், தமிழகத்தில் பெரிய பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kannan

சென்யார் புயல்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: Cyclone Senyar forms over Strait of Malacca, heavy rain alert for region ”மலேசியா மற்றும் மலாக்கா ஜலசந்தி அருகே நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது புயலாக இன்று காலை வலுப்பெற்றது. சென்யார் என்று அழைக்கப்படும் இந்தப் புயலுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் பெயரை வழங்கியது.

தமிழகத்தில் பெரிய பாதிப்பில்லை

மலாக்கா ஜலசந்தியின் நிலை கொண்டு இருக்கும் சென்யார் புயல், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும். இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பெரிய பாதிப்பும் இருக்காது.

மிதமான மழைக்கு வாய்ப்பு

ஆயினும் சென்யார் புயல் காரணமாக, தமிழகத்தில் தென் மற்றும் வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும், இன்றும், நாளையும், இடி, மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் சில இடங்களில், டிசம்பர் 1ம் தேதி வரை மிதமான மழை தொடரலாம். கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

இதனிடையே, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வடக்கு, வடமேற்கு திசையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும். அதன்பின், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

29,30ம் தேதிகளில் பலத்த மழை

இது தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வந்தால், வரும் 29, 30ம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள் கனமழையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஏற்கனவே, இந்தப் பகுதிகளுக்கு வானிலை மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்து இருக்கிறது.

==============