சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்
Voter List Enrollment Date Extended in Tamil Nadu : பிகாரில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் கடந்த நவம்பர் மாதம் 4ம் தேதி தொடங்கியது.
97,37,000 பேர் நீக்கம்
கணக்கீட்டு படிவங்கள் பெறும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சமாக குறைந்தது.
பெயரை இணைக்க வாய்ப்பு
இதையடுத்து, இறந்தவர்கள் தவிர்த்து மீதமுள்ளவர்களில் தகுதியான வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றும் உரிய தகவல்களை அளிக்காத சுமார் 12 லட்சத்து 43 ஆயிரம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது.
கால அவகாசம் நீட்டிப்பு
இவற்றிற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, பிப்ரவரி 15ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக இருந்தது. இந்தநிலையில், வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
30ம் தேதி வரை வாய்ப்பு
அதன்படி, வரும் 30ம் தேதி வரை பெயர்களை சேர்க்கலாம். ச நிலையில், மீண்டும் ஜனவரி 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 17 இறுதி வாக்காளர் பட்டியல்
இப்படிவங்கள் சரிபார்க்கப்பட்டு வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் இந்தப் பட்டியலில் இடம் பெற்று இருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
====