death of an undertrial prisoner in Nagercoil: Shocking details revealed in the autopsy  google
தமிழ்நாடு

நாகர்கோவிலில் விசாரணை கைதி மரணம்: உடற்கூராய்வில் அதிர்ச்சி தகவல்கள்: மூன்று காவலர்கள் கைது, உச்சத்தில் காவல் மரணங்கள்!

நாகர்​கோ​வில் கிளைச்​சிறை​யில் உயிரிழந்த விசா​ரணைக் கைதி சபரிவர்​மனின் என்பவர் உயிரிழந்துள்ளதற்கு தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்

Rohini

விசாரணை கைதி மரணம்

கன்​னி​யாகுமரி மாவட்​டம் வடக்​கு ​தாமரைகுளம் அருகே நாராயணன்​புதூர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் 33 வயதான சபரிவர்​மன் கடந்த 9-ம் தேதி மதி​யம் 1.30 மணி​யள​வில் இவரது கடை​யில் தென்​தாமரகுளம் போலீ​ஸார் சோதனை நடத்​தியதில் அரசால் தடை செய்​யப்​பட்ட

குட்கா பொருட்​கள் இவரது கடை​யில் இருந்​த​தாகக் கூறி, சபரிவர்​மனை கைது செய்து நாகர்​கோ​வில் சிறை​யில் அடைத்​தனர். கடந்த 4 நாட்​களாக அவர் விசாரணை கைதி என்ற நிலை​யில் இருந்​துள்​ளார்

விசாரணையில் மரணம்

இந்த விசாரணைக்காக காவல் விசாரணைக்கு அழைத்து செல்லபட்ட சபரிவர்மன்சிறை அறை​யில் அதி​காலை​யில் மயங்​கிய நிலை​யில் கிடந்​த​தாக் கூறி சிகிச்சைகாக ஆசா​ரிபள்​ளம் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர்.

அங்கு மருத்​து​வர்​கள் பரிசோ​தித்​த​போது சபரிவர்​மன் ஏற்​கெனவே உயி​ரிழந்​தது தெரிய​வந்​தது. இத்​தகவல் அவரது குடும்​பத்​தினருக்கு தெரிவிக்​கப்​பட்​டதும் அவர்​கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடற்கூராய்வில் அதிர்ச்சி தகவல்

இந்த நிலையில் காவல் விசாரனையில் உயிரிழந்த சபர்வர்மனின் உடற்கூராய்வில் அதிர்ச்சிதரும் தகவல் வெளியாகி பெரும் அத்ர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.அதில் அவரது உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

தெரியவந்துள்ளது. கை, கால்கள், நெஞ்சு, தலை, கழுத்தின் பின் பகுதியில் காயமும், வலது கையில் முறிவும் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது உடலில் கை, கால்கள் கட்டிப்போட்டு தாக்கியதற்கான அடையாளமும் இருந்தது தெரியவந்துள்ளது

காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை

சிறையில் விசாரணை கைது சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில் சிறைக் காவலர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ​

நாகர்​கோ​வில் கிளைச்​சிறை​யின் தலைமை வார்டன் ஜெகன், சிறை வார்டன்கள் சிவகுமார் மற்றும் திருவுடை நம்பி ஆகியோர் கைது செய்தும் , பணி இடைநீக்கன் செய்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது, நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கவும் உத்தரவு

காவல் மரணம் , தலைவர்கள் கண்டனம்

எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளனர்.

சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது.

இந்தச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.

சபரிவர்மனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். என்று கண்டனம் தெரிவித்துள்ளார்

அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு பிந்தைய இரு மாதங்களில் காவல்துறையினரின் காவலில் இருந்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அதற்கான காரணங்களை கண்டறியவும் விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

கொடூரமாக கொல்லப்பட்ட சபரிநாதனின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சீமான் கண்டனம்

விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்தே கொன்ற காவல்துறையினரைப் பாதுகாப்பதா? முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பதா?விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்து, சிறைப்படுத்த வேண்டுமெனவும்,

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.என்று தெரிவித்துள்ளார்.

===================