The deep depression currently situated in the Bay of Bengal is expected to intensify and move towards northern Tamil Nadu on the 17th as Cyclone 'Akwan'.
தீவிரம் பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் பெறுகிறது.
மத்திய தெற்கு வங்கக்கடலில் உருவான வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதிவான அக்வான் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
நவ. 17ல் அக்வான் புயல்
நவம்பர் 17ஆம் தேதிக்குள் தீவிர புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், இந்திய - அரேபிய மற்றும் இந்திய - பசிபிக் உயர் அழுத்த வளையங்களின் தடையால் நவம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மிக மெதுவாக நகரும் எனத் தெரிகிறது.
வட தமிழகம் நோக்கி நகருமா?
அக்வான் புயலானது வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்தால், சென்னை உள்பட வட மாவட்டங்கள் நல்ல மழை பெறும். சென்னை அருகே புயல் கரையை கடந்தால், கனமழையை எதிர்பார்க்கலாம் எனத் தெரிகிறது.
சென்னைக்கு பெருமழை ஆபத்தா?
16 மற்றும் 17ம் தேதிகளில் பெரிய அளவில் நகராமல் இருக்கும் வாய்ப்பும் இருக்கிறது. மேூலும் எண்ணூர் அருகே கரையை கடந்தால், சென்னைக்கு பலத்த சேதம் ஏற்படும்.
19ம் தேதி அல்லது 20ம் தேதி புயல் கரையை கடக்கலாம் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
======================