demand made in Legislative Assembly for CBI inquiry into shooting deaths of 3 Tamils ​​in Karnataka AI generated
தமிழ்நாடு

3 தமிழர் சுட்டுக்கொலை ’1 கோடி இழப்பீடு, சிபிஐ விசாரணை’ : கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் : தமிழக அரசு 10 லட்சம்!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என, சட்டசபையில் வலியுறுத்தப்பட்டது.

Kannan

தமிழக சட்டசபை இன்று கூடியதும், கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் மீது உறுப்பினர்கள் பேசினார்கள்.

கர்நாடக வனத்துறை அப்பட்டமாக மீறல்

முதலில் பேசிய திமுக எம்.எல்.ஏ. பால் மனோஜ் பாண்டியன், “கால்நடைகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி விவசாயிகளை சுட்டுக் கொன்றது மனித உரிமை மீறல்” என்றார்.

சிபிஐ விசாரணை தேவை

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்”. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஒரு கோடி இழப்பீடு

பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் பேசுகையில், “ 3 தமிழர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; 3 தமிழர் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

தமிழர்களை இளக்காரமாக பார்ப்பதா?

காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் பேசுகையில், “3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது; தமிழர்கள் என்றால் இளக்காரமாக பார்க்கும் நிலை உள்ளது. கர்நாடகா அரசின் இழப்பீடு போதுமானது அல்ல. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் ராமச்சந்திரன், சிபிஎம் லதா, பாஜகவின் போஜராஜன் உள்ளிட்டோரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து சிபிஐ விசாரணை கோரினர்.

அமைச்சர் நிர்மல்குமார் பதில்

கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் நிவாரணம் கர்நாடகா அறிவித்துள்ளது.

17ம் தேதி உயிரிழந்தவர்களின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலில் சுட்டது யார்? வனத்துறை வன்முறையை பயன்படுத்தியது சரியா? என்பது தொடர்பாக அங்குள்ள மாஜிஸ்திரேட் விசாரணை செய்ய அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு கண்டனம்

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் கர்நாடகா முதல்வர் விளக்கம் ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார், என தெரிவித்தார்.

தமிழக அரசு ரூ.10,000 நிவாரணம்

கர்நாடகா மாநிலத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 3 தமிழர்களுக்கு நமது மாநில அரசு நிதியுதவி வழங்கு முன்வருமா என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார்.

--------------