Director and actor Sundar C is contesting from the Madurai Central constituency on behalf of the New Justice Party. google
தமிழ்நாடு

Sundar C : அரசியலில் இயக்குநர் சுந்தர். சி : புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதி : இரட்டை இலையில் போட்டி!

Director Sundar C Contest in Madurai Constituency in TN Elections 2026 : புதிய நீதிக்கட்சி சார்பில் இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார்.

Kannan

Director Sundar C Contest in Madurai Constituency in TN Elections 2026 : தமிழக சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் திங்கட்கிழமை தொடங்குகிறது.

தமிழக தேர்தல் களம்

விஜயின் வருகையில் தேர்தல் களம் அனல் பறக்கிறது. அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, விஜயின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. பாமக நிறுவனர் ராமதாசும், சசிகலாவும் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.

அதிமுக கூட்டணி, புதிய நீதிக்கட்சி

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து, தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு, பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக கூட்டணியில் ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. அதில் ஒன்று மதுரை மத்திய தொகுதி.

இன்னும் ஒரு தொகுதி எது என்பது பின்னர் முடிவு செய்து அறிவிக்கப்பட இருக்கிறது. அந்த தொகுதியில் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி போட்டியிட வாய்ப்பு இருக்கிறது.

மதுரை மத்திய தொகுதி - சுந்தர்.சி போட்டி

அந்த வகையில் மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளராக சுந்தர். சி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட அவர், முதல்முறையாக அரசியலில் தடம் பதிக்கிறார். இவரது மனைவியும், நடிகையுமான குஷ்பு பாஜகவில் இருக்கிறார்.

இரட்டை இலையில் போட்டி

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் சுந்தர். சி போட்டியிடுகிறார்.

இதுகுறித்து புதிய நீதிக் கட்சித் தலைவர் சி.வி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.

மேலும் 30.03.2026 திங்கட்கிழமை பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது", எனக் குறிப்பிட்டுள்ளார்.

==============