மண்ணை விட்டு பிரிந்தார் பாக்யராஜ்
இயக்குநர் ஜாம்பவான், திரைக்கதை மன்னர் பாக்யராஜ், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், ஜி.கே. வாசன், பிரேமலதா விஜயகாந்த், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி
நடிகர் ரஜினிகாந்த் முதல் திரையுலக பிரபலங்கள் அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரது இறுதிச் சடங்கு நாளை பிற்பகல் அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.
கண்களை தானம் செய்தார்
இந்தநிலையில், தனது கண்களை தானம் செய்து ரசிகர்களை கண்ணீரால் நனைத்து இருக்கிறார் பாக்யராஜ். இதற்காக சென்னையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டம் வீட்டிற்கு மருத்துவக் குழுவினர் வந்து கண்களை பெற்றுச் எடுத்து சென்றனர்.
கண்கள் தானம்
கண்களை தானம் செய்ததன் மூலம் மீண்டும் இந்த உலகை பார்க்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறார் பாக்யராஜ். அவரது கண்கள் பொருத்தப்படுவதன் மூலம் இரண்டு பேருக்கு பார்வை கிடைத்து, இந்த உலகை காண முடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்பே தனது கண்களை தானம் செய்ய பாக்யராஜ் பதிவு செய்திருந்தார். அதன்படி, கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இது அவரது குடும்பத்தினருக்கு சிறிது ஆறுதலாக அமைந்து இருக்கிறது.
====================