Chennai municipal corporation has decided to keep Director bhagyaraj name for his street  Google
தமிழ்நாடு

நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர் : மாநகராட்சி தீர்மானம் !

நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியா 5-வது குறுக்கு சாலைக்கு நடிகருமான மறைந்த கே. பாக்யராஜின் பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

NARENDRAN K

மறைவுக்குப் பிறகு கிடைத்த கவுரவம் :

சமீபத்தில் மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

பல தசாப்தங்களாக ரசிகர்களை தனது படைப்புகளால் மகிழ்வித்த அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவர் வசித்து வந்த சாலைக்கு அவரது பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது

எந்த சாலைக்கு பெயர் மாற்றம்?

நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் அமைந்துள்ள 5-வது குறுக்கு சாலையில்தான் பாக்யராஜின் இல்லம் உள்ளது.

இந்த சாலையின் பெயரை "திரைக்கதை மன்னர் கே. பாக்யராஜ் சாலை" என மாற்ற சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆய்வுக்குப் பிறகு பரிந்துரை :

சாலை பெயர் மாற்றம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு, பாக்யராஜின் பெயரை சாலைக்கு சூட்ட பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், அதனை மாமன்றம் ஒப்புதல் அளித்து தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது.

அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் கோப்பு :

மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக அரசின் இறுதி அனுமதிக்காக கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசின் ஒப்புதல் கிடைத்ததும், புதிய பெயர் கொண்ட சாலை பலகைகள் அமைக்கப்பட்டு பெயர் மாற்றம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் வரவேற்பு :

தமிழ் சினிமாவில் குடும்பக் கதைகள் மற்றும் தனித்துவமான திரைக்கதைகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாக்யராஜின் பெயர் சாலைக்கு சூட்டப்படுவது, அவருக்கு வழங்கப்படும் சிறப்பு மரியாதையாக பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையை திரையுலகினரும் ரசிகர்களும் வரவேற்று வருகின்றனர்.

==================