DMDK DMK Alliance 2026 : Premalatha Vijayakanth said that the DMK alliance has become even stronger in TN Election 2026 Source : Google
தமிழ்நாடு

திமுகவுடன் இணைந்த தேமுதிக : ஆதி முதல் அந்தம் வரை, DMDK-வின் கூட்டணி நிலவரம்!

DMDK Alliance : தேமுதிக கூட்டணி தற்போது திமுகவில் இணைந்துள்ளது. இதனால் திமுக கூட்டணி மேலும் வலுப்பெற்றுள்ளதாக சொல்லப்படும் நிலையில், தேமுதிக திமுக கூட்டணி இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளனர்.

Baala Murugan

அதிமுகவுடன் கூட்டணி - 29 இடங்கள் வெற்றி

DMDK DMK Alliance 2026 : கடந்த 2005 -ஆம் ஆண்டு மதுரையில் விஜயகாந்த் கட்சி துவங்கினார். 2006 ஆம் ஆண்டு தேர்தலிலும் 2009 ஆண்டு தேர்தலிலும் தனித்து தேமுதிக களம் கண்டது.

அதன் பின்னர் விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 29 இடங்களை வென்று எதிர்க்கட்சித் தலைவராக மாறினார்.

அந்த சமயத்தில் விஜயகாந்த் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருப்பார் என்றெல்லாம் சொல்லப்பட்ட ஒரு காலம் அது.

அதிமுக கூட்டணியை விட்டு விலகிய தேமுதிக

தேமுதிக 2016 -ல் மக்கள் நல கூட்டணியை உருவாக்கி அதில் அங்கம் வகித்தது. அதன் பிறகு 2019-ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக.

2021 -ஆம் ஆண்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்தது. 2024 ஆம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது.

இந்த சமயத்தில் எடப்பாடி ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டை தேமுதிகவிற்கு ஒதுக்குவோம் என வாக்களித்திருந்தார்.

ஆனால் எம்.பி சீட் வழங்காததால் தேமுதிக கூட்டணியை விட்டு விலகி இருந்தது.

முதன்முறை திமுகவுடன் கூட்டணி

இந்த சூழலில் வருகிற சட்டமன்ற தேர்தலின் களநிலவரம் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் போட்டியில் உள்ளதால், முதல்முறையாக திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது.

நான்கு தேர்தல்களில் தொடர் தோல்வி

கடந்த நான்கு தேர்தல்களில் தேமுதிகவின் தொடர் தோல்விகளுக்கு தவறான கூட்டணி முடிவுகளே காரணம் என விமர்சனம் எழுந்த நிலையில் தற்போது ஆளுங்கட்சியான திமுகவில் தேமுதிக கூட்டணி இணைந்திருக்கிறது.

இதனால், தேமுதிகவின் கூட்டணி யாருடன் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

திமுக -தேமுதிக கூட்டணி

அரசியல் விமர்சகர்கள் மத்தியில், தேமுதிக புதிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்ப்புகள் இருந்து நிலையில், தற்போது அது மாற்றாக உடைந்து, இதுவரை சேர்ந்து கூட்டணி அங்கம் அமைக்காத கூட்டணியாக ,திமுக - தேமுதிக கூட்டணியாக அமைந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது என்பது குறிப்படத்தக்கது.