DMDK General Secretary Premalatha Vijayakanth Election Campaign Tour 2025 
தமிழ்நாடு

‘உள்​ளம் தேடி இல்​லம் நாடி’ : பிரேமலதா தேர்தல் சுற்றுப் பயணம்

Premalatha Vijayakanth Election Campaign Tour : சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவும் ஆகஸ்டு 3ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Kannan

சூடுபிடிக்கும் தேர்தல் களம் :

Premalatha Vijayakanth Election Campaign Tour : தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் 8 மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் வெற்றி வியூகங்களை வகுத்து செயல்படுத்த தொடங்கி விட்டன. ஆளும் கட்சியான திமுக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தொடங்கி விட்டது. முதல்வர் ஸ்டாலினும்(MK Stalin) மாவட்டம் தோறும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும், ’ மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் மக்களை சந்தித்து, திமுக அரசின் அவலங்களை தோலுறுத்து வருகிறார்.

யாருடன் கூட்டணி, திணறும் தேமுதிக :

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்த தேமுதிக, இந்தமுறை யாருடன் கூட்டணி(DMDK Alliance) என்பது பற்றி இதுவரை முடிவு எடுக்கவில்லை. தங்களுக்கு அதிமுக ராஜ்யசபா சீட் வழங்கவில்லை என்பது அந்தக் கட்சியின் ஆதங்கமாக உள்ளது. எனவே, திமுக பக்கம் போகுமா என்ற ஐயமும் வலுத்து வருகிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்(TVK) அமைக்கும் கூட்டணிக்கு தேமுதிக செல்லும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

முதற்கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் :

இந்தநிலையில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தேமுதிகவின் முதற்​கட்ட தேர்தல் சுற்​றுப் ​பயணத்தை அக்கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜயகாந்த்(Premalatha Vijayakanth) ஆகஸ்டு 3ம் தேதி முதல் மேற்கொள்கிறார். ​ திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி தொகு​தி​யில் தனது சுற்​றுப்​பயணத்தை தொடங்​கும் அவர், காஞ்​சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்​பத்​தூர், கிருஷ்ணகிரி என சுற்றுப் பயணம் செய்து செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் அதனை நிறைவு செய்கிறார் பிரேமலதா.

‘உள்​ளம் தேடி இல்​லம் நாடி’ :

இந்த பயணத்​தில் ‘உள்​ளம் தேடி இல்​லம் நாடி(Ullam Thedi Illam Naadi)’ என்ற தலைப்​பில் பூத் முகவர்​களை நேரடி​யாக சந்​தித்து ஆலோ​சனை​, ‘கேப்​டனின் ரத யாத்​திரை’, ‘மக்​களை தேடி மக்​கள் தலை​வர்’ என்ற தலைப்​பு​களில் தொகுதி மக்​களை சந்​தித்து பிரச்​சா​ரம் என தேமுதிகவிற்கு ஆதரவு திரட்டுகிறார் . காலை மற்​றும் மாலை நேரங்​களில் தேர்​தலுக்​கான பணி​களில் அவர் தீவிர​மாக ஈடு​படு​வார் எனத் தெரிகிறது.

=====