DMK, ADMK, DMDK, MNM announced they will boycott meeting of MPs under the leadership of CM Vijay AI generated
தமிழ்நாடு

"திமுக, அதிமுக, தேமுதிக, மநீம” புறக்கணிப்பு : முதல்வர் விஜய் தலைமையில் MPக்கள் கூட்டம் : தொகுதி மறுவரையறை ஆலோசனை...!

முதல்வர் விஜய் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற இருக்கும் எம்பிக்கள் கூட்டத்தை திமுக, அதிமுக,தேமுதிக, மக்கள் நீதி மய்யம் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

Kannan

தொகுதி மறுவரையறை மசோதா

மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கக் கொண்டு வரப்படும் திட்டமே தொகுதி மறுவரையறை மசோதா 2026.

தென் மாநிலங்களுக்கு சிக்கல்

இதன் மூலம் மக்களவை இடங்கள் அதிகரிக்கப்படலாம் என்றாலும், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தற்போது நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத் தொடரில், தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக 3 நாட்கள் சிறப்பு கூட்டத்தொடரை நடத்துவது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

எம்பிக்கள் கூட்டம் தவெக அழைப்பு

தமிழகத்தில் தவெக தலைமையில் ஆட்சி அமைந்துள்ள நிலையில், தொகுதி மறுவரை தொடர்பாக ஆலோசனை நடத்த முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டத்திற்கு தமிழக எம்பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

முதல்வர் தலைமையில் ஆலோசைன

சென்னையில் இன்று பிற்பகல் இந்தக் கூட்டம் நடைபெறகிறது. முதல்வர் விஜய் கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார்.

திமுக, அதிமுக புறக்கணிப்பு

இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லையென திமுக அறிவித்துள்ளது. இதே போல அதிமுகவும் கலந்து கொள்ளாது என தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக, மநீம புறக்கணிப்பு

திமுக கூட்டணி கட்சியான தேமுதிகவும் முதலமைச்சர் விஐய் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டோம் என தெரிவித்துள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

யாரெல்லாம் கலந்து கொள்வார்கள்

தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும 3 ராஜ்யசபா உறுப்பினர்கள், விடுதலை சிறுத்தையின் 2 மக்களவை உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலா 2 மக்களவை உறுப்பினர்கள், மதிமுகவின் ஒரு மக்களவை எம்பியும் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மாணிக்கம் தாகூர் கண்டனம்

தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக கூட்டத்தை புறக்கணிப்பது பற்றி கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்,

தமிழக நலனில் அக்கறையில்லை

”தமிழகத்தின் நலன்களை விடத் தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் இதில் பங்கேற்காமல் இருக்கலாம்.

”ஆனால், தமிழகத்திற்கு முதலிடமும் அரசியலுக்கு அடுத்த இடமும் அளிப்பவர்கள், தமிழக முதல்வர் அவர்கள் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பார்கள்.

அரசியல் செய்ய வேண்டாம்

இது கட்சி அரசியல் சார்ந்த விவகாரம் அல்ல. தமிழகத்தின் உரிமைகள், நலன்கள் மற்றும் எதிர்காலம் சார்ந்தது.

தமிழக மக்கள் அனைத்தையும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள்; இக்கட்டான சூழலில் தமிழகத்துடன் உறுதியாக நின்றது யார் என்பதை அவர்கள் நினைவில் கொள்வார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

==================