DMK government; 19,965 deaths in 2024: 71% attributed to alcohol and cannabis addiction – Anbumani alleges! google
தமிழ்நாடு

திமுக ஆட்சி : 2024ம் ஆண்டில் 19,965 தற்கொலைகள், 71% மது, கஞ்சாபோதையே காரணம்! : ஆதாரங்களுடன் அன்புமணி குற்றச்சாட்டு!

Anbumani slams DMK government : திமுக ஆட்சியில் மட்டும் தமிழ்நாட்டில் 10 லட்சம் பேர் மது போதையால் ஏற்பட்ட நோயால் பலியாகி இருப்பதாக அன்புமணி குற்றமசாட்டியுள்ளார்.

Rohini

பாமக தலைவர் அன்புமணி கருத்து

Anbumani slams DMK government : தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டில் 19,965 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அவற்றில் 71% தற்கொலைகளுக்கு ஏதோ ஒரு வகையில் கட்டுப்படுத்தப்படாத மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கம் தான் காரணம் என்று திமுக அரசு வெளியிட்ட கொள்கை ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது, கஞ்சா பழக்கம் உயர்வு

மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களையும் கட்டுப்படுத்தத் தவறியதன் மூலம் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு கஞ்சா திமுக அரசு காரணமாக இருந்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். என்று திமுக ஆட்சியில் நடந்த மது சம்மந்தப்பட்ட கொலைகளுக்கு குற்றம் சாட்டியுள்ளார்

தற்கொலைகள் அதிர்ச்சியூட்டுகின்றன :அன்புமணி

தற்கொலைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான மனநலக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கடந்த 25.07.2025ஆம் நாள் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதனடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களில்

நடைமுறைப்படுத்துவதற்கான மனநலக் கொள்கையை தமிழக அரசின் சுகாதாரத் துறை கடந்த 6ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள தற்கொலைகள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுபவையாக உள்ளன என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டு பேசியதாவது

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அளவில் அதிக தற்கொலை நிகழும் மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதலிடம் அல்லது இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. அதிக சாலை விபத்துகள் நிகழும் மாநிலமாகவும் தமிழ்நாடு தான் திகழ்கிறது

இதற்கெல்லாம் முதன்மைக் காரணம் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தான் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி நன்றாக அறியும். இதைக் கருத்தில் கொண்டு தான் போதைப்பொருள் ஒழிப்புக்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி தமிழ்நாட்டில் 3321 மதுக்கடைகள் உள்பட நாடு முழுவதும் 90 ஆயிரம் மதுக்கடைகளை மூட வைத்ததும் மதுவின் தீமைகளை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் தான்.

சமூகத்தை திட்டமிட்டு சீரழித்துள்ளது

ஆனால், எதிர்க்கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கு உள்ள பொறுப்புணர்வில் ஒரு விழுக்காடு கூட தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கு இல்லாததால் தான் தமிழ்நாடு தற்கொலைகளின் பூமியாக தொடர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாக வாக்குறுதி அளித்த திமுக, வெறும் 500 மதுக்கடைகளை மட்டும் மூடி விட்டு 1200க்கும் மேற்பட்ட மனமகிழ் மன்றங்களைத் திறந்து தெருக்கள் தோறும் 24 மணி நேரமும் மதுவை வெள்ளமாக ஓட விட்டுக் கொண்டிருக்கிறது.

எப்படி எந்த வகையில் பார்த்தாலும் கொலைகள், தற்கொலைகள், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு மது மற்றும் கஞ்சா போதையைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசு தான் காரணம். சமூகத்தை திட்டமிட்டு சீரழித்த திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவது உறுதி”. என்று அவரின் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது