DMK in deep turmoil as reports have emerged that behind-the-scenes talks are underway between the TVK and Congress google
தமிழ்நாடு

TVK - CONGRESS Alliance : திரைமறைவில் வேகமெடுக்கும் தவெக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை : கைகோர்க்கும் நிர்வாகிகள்

TVK Congress Alliance 2026 : தவெக-காங்கிரஸ் இடையே திரைமறைவு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருப்பதால், திமுக கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது.

Kannan

தகிக்கும் தேர்தல் களம்

TVK Congress Alliance 2026 : 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவு சூடுபிடித்துள்ளது. குறிப்பாக விஜயின் வருகை, திராவிட கட்சிகளை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தவெகவை காட்டி கூட்டணி கட்சிகள் கூடுதல் இடம் கேட்டு நெருக்கடி கொதுத்து வருகின்றன.

தவெகவால் காங்கிரஸ் உற்சாகம்

விஜயின் வருகையால் புதுத்தெம்புடன் இருப்பது காங்கிரஸ் கட்சிதான். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை முன்வைத்தது. அது சரிப்பட்டு வராது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த பிறகும், தனது கோரிக்கையை கைவிட காங்கிரஸ் தயாராக இல்லை.

கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரம்

கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திமுக தனது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ், விசிக், மமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, தேர்தல் உத்தி குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

திமுக-காங்கிரஸ். பேச்சில் தேக்கம்

இந்த சூழலில் காங்கிரஸ் – திமுக இடையேயான பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் காணவில்லை. முடங்கி போய் இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தவெக (தமிழக வெற்றிக் கழகம்) உடன் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

திரைமறைவு பேச்சுவார்த்தை

தேசிய நிர்வாகிகள் மட்டத்தில் இந்த பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது. அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், காங்கிரஸ் வட்டாரங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

எதிர்பார்ப்புகள் - பேச்சுவார்த்தை

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் மற்றும் தவெக தரப்பு இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும், இரு தரப்பும் ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தவெகவுக்கு இளைஞர்கள் ஆதரவு

இளைஞர்கள் மத்தியில் தவெகவுக்கு அதிகரித்து வரும் செல்வாக்கு, காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஏற்கனவே ஜனநாயகன் படம் ரிலீஸ் பிரச்னைக்கு காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவு கொடுத்தது.

மாற்றி யோசிக்கும் காங்கிரஸ்

இந்த நட்புறவே கூட்டணி வாய்ப்பாக மாறி இருப்பதாக தெரிகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள தொய்வே தவெக உடன் நெருங்கச் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் 21 இடங்கள், ஒரு ராஜ்ய சபா சீட் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவதால், காங்கிரஸ் மாற்று யோசனைக்கு தயாராகி விட்டதாகவும், நடைபெறும் நிகழ்வுகள் தெரிவிக்கின்றன.

================