DMK Minister I. Periyasamy ED Raid in Chennai 
தமிழ்நாடு

EDRaid: அமைச்சர் ஐ.பெரியசாமி வீடுகளில் சோதனை: அமலாக்கத்துறை அதிரடி

Minister I. Periyasamy ED Raid : அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

Kannan

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் :

Minister I. Periyasamy ED Raid : தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.

அமலாக்கத்துறை சோதனை :

இந்தநிலையில், திண்டுக்கலில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டுக்கு(I. Periyasamy House ED Raid) மூன்று வாகனங்களில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனையின்போது அமைச்சர் ஐ.பெரியசாமி அவரது வீட்டில் இருந்தார்.

அமைச்சர் மகன், மகள் வீட்டிலும் சோதனை :

திண்டுக்கல் சீலப்பாடியில் அமைச்சரின் மகனும் பழநி தொகுதி எம்எல்ஏவுமான இ.பெ.செந்தில்குமார் வீட்டுக்கு மூன்று வாகனங்களிலும், அசோக்நகரில் உள்ள அமைச்சரின் மகள் இந்திரா வீட்டுக்கு மூன்று வாகனங்களிலும் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் வீடுகளில் சிஆர்பிஎப் போலீஸார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.

குவிந்துள்ள திமுகவினர், பரபரப்பு :

அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்துவதை அறிந்த திமுகவினர், அமைச்சர் வீடு உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் திரண்டனர். இதனால் பரபரப்பு நிலவுகிறது.

மேலும் படிக்க : கோரிக்கையை கேட்காமல், சினிமா பார்க்கிறார் : எல். முருகன் காட்டம்

விதிகளை மீறி வீடு ஒதுக்கீடு :

கடந்த திமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தபோது விதிமுறைகளை மீறி உளவுத்துறை போலீஸ் அதிகாரியாக இருந்த ஜாபர்சேட் மனைவிக்கு வீட்டுவசதி வாரிய இடத்தை ஒதுக்கியது தொடர்பாக உள்ள வழக்கில் அமலாக்கத் துறை சோதனை நடத்துவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட போதிலும் அண்மையில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

=============

.