DMK MLAs arrived Assembly wearing black badges, calling out, "Open your mouth, CM." google
தமிழ்நாடு

”வாயை திறங்க CM” : ’திரையில் ஹீரோ, தரையில் ஜீரோ’ : கருப்பு பேட்ஜ், பதாகைகளுடன் திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்...!

சட்டமன்றத்திற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுக எம்எல்ஏக்கள், வாயை திறங்க சிஎம் என்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டு, கவனம் ஈர்த்தார்கள்.

Kannan

17வது சட்டமன்ற கூட்டத்தொடர்

17வது சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பேரவையில் உரையாற்றினார்.

திமுகவினர் கருப்பு பேட்ஜ்

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உட்பட அனைவரும் பேட்ஜ் அணிந்து இருந்தனர்.

"வாயத் திறங்க CM!"

"வாயத் திறங்க CM!" என வாசகம் கருப்பு பேட்ச்யில் (Batches) இடம்பெற்று இருந்தது. தவெக அரசோட செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாவும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிற விதமாகவும் இந்த போராட்டத்தை திமுக முன்னெடுத்தது.

பதாகைகளுடன் போராட்டம், முழக்கம்

’கதறல் கேட்குதா சிஎம்', 'திரையில் நாயகன், தரையில் வில்லன்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி திமுக எம்எல்ஏக்கள் முழக்கமிட்டாங்க.

கூட்டத்தொடரில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப திமுகவினர் திட்டமிட்டு இருக்காங்க.

‘வாயில் ஏதாவது வருமா சிஎம்’, ’தூய சக்தி அல்ல துயர சக்தி’ ’திரையில் ஹீரோ, தரையில் ஜீரோ’, ’கதறல் சப்தம் கேட்கிறதா’, “தற்குறி ஆட்சி, தமிழ்நாடே சாட்சி’, ’ரீல்ஸ் இங்கே, ரியல்ஸ் எங்கே’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் திமுக எம்எல்ஏக்கள் போராட்டத்தை முன்னெடுத்து, மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

=============================