DMK rule again in Tamil Nadu? Confusion over who will rule, what do the poll results say?  google
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி? யாருக்குஆட்சி என்ற குழப்பம், கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

ஐந்து மாநில தேர்தலானது நடந்து முடிந்து இருக்கும் நிலையில் , தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பானது வெளியிடப்பட்டிருக்கிறது.

Rohini

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்

ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலானது நிறைவு பெற்றிருக்கும் நிலையில் , மே 4 ம் தேதி இறுதி வாகு பதிவு எண்ணிக்கையானது நடைபெற இருக்கிறது.இதனை ஒட்டி தேர்தற்க்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுவது

DTV- PEOPLE'S PULSE நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகளும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. அதைப்போல தவெக 18 முதல் 24 தொகுதிகளும் மற்றவை 2 முதல் 6 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியை காப்பாற்றும் ? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு

DTV- PEOPLE'S PULSE நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகளும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் தவெக 18 முதல் 24 தொகுதிகளும் மற்றவை 2 முதல் 6 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Times Now JVCஅதிமுக ஆட்சியை கைப்பற்றும்

அதைப்போல 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை கைப்பற்றும் என Times Now JVC கணித்துள்ளது. அதன்படி அதிமுக கூட்டணி 128 ,முதல் 147 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 75 முதல் 95 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. தவெக 8 முதல் 15 தொகுதிகள் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல பிற கருத்து கணிப்புகள் கூறுவது

PEOPLE'S INSIGHT வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 120 முதல் 140 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அதிமுக கூட்டணி 60 முதல் 70 தொகுதிகளிலும், தவெக 30- முதல் 40 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும் மற்றவை அதிகபட்சம் 4 இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NDIA TODAY AXIS MY INDIA தமிழக வெற்றிக் கழகம் வெல்லும் என்று கணிப்பு

NDIA TODAY AXIS MY INDIA கருத்துக் கணிப்பில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 இடங்களை கைப்பற்றி தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது .

திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்களையும், அதிமுக கூட்டணி 22 முதல் 32 தொகுதிகளையும் கைப்பற்றும் எனக் கணித்துள்ளது. அதேநேரம் திமுக மற்றும் தவெக ஒருசேர 35 சதவீத வாக்குகளை பெறும் என AXIS MY INDIA கணித்துள்ளது.

திமுக கூட்டணி 103 முதல் 113 தொகுதிகளும், தவெக 10 தொகுதிகளும் வெல்லக் கூடும் என்றும் VOTE VIBE கணித்துள்ளது. வாக்கு சதவீதத்தை பொறுத்தமட்டில் அதிமுக கூட்டணி 39.9 சதவீதமும், திமுக கூட்டணி 38.9 சதவீதமும், தவெக 15.8 சதவீதமும் பெறும் எனத் தெரிவித்துள்ளது.

அடுத்த முதல்வர் யார்க்கு எவ்வளவு ஆதரவு

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக யார் வர விருப்பம் என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் என 39. சதவீதம் பேரும், எடப்பாடி பழனிசாமி என 38.4 சதவீதம் பேரும், விஜய் என 14.1 சதவீதம் பேரும் ஆதரவை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

============