DMK stages a walkout; Chief Minister delivers a speech in a cinematic style; Udhayanidhi offers an explanation. google
தமிழ்நாடு

சட்டப்பேரவையில் முதல்வரின் பதிலுரை: ”வெளிநடப்பு செய்த திமுக, சினிமா பாணியில் முதல்வர் உரை” : விளக்கம் அளித்த உதயநிதி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் விஜய் பதிலுரை அளித்தார்.

Rohini

ஆளுநர் உரையின் மீதான கருத்து , முதல்வர் விஜய் உரை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கடைசி நாளான இன்று முதல்வர் விஜய் பதில் உரை அளித்தார்,

அதில் திமுக ஆட்சியில் நடந்ததாக கூறி சில ஊழல்களை முன்வைத்தார் , கட்சி நிதி என்ற பெயரில் டாஸ்மாக்கில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்

வெளிநடப்பு செய்த திமுக

அப்போது திமுகவுக்கு எதிராக முதல்வர் விஜய் குற்றச்சாட்டுகள் முன்வைத்த நிலையில், சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பும் செய்தனர்.

விளக்கம் அளித்த உதயநிதி

நேற்றைய உரையில் சட்டப்பேரவையின் தொடக்கத்தின் தமிழ்த் தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படுவதுதான் வழக்கம்.

ஆனால், மரபை மீறி இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து ஏன் இருமுறை பாடப்படவில்லை என்று கேள்வி எழுப்பினேன். இதற்கு எவ்வித பதிலும் கூறவில்லை.

நான் முதல்வன், மின்வெட்டு, விவாசாயிகள் குறித்து விளக்கம் இல்லை

நான் முதல்வன் திட்டம் மூலம் 41 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள். அதை முடக்கியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையான பதில் இல்லை.

தொடரும் மின்வெட்டு குறித்த கேள்விக்கு சரியான பதிலளிக்காமல் திமுக மீது பழிபோட்டுள்ளார்கள்.

பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக விவசாயிகளின் போராட்டம் திமுக தூண்டுவிட்டு தான் நடக்கிறது என்று முதல்வர் கொச்சைப்படுத்தி உள்ளார்கள்

இது எதற்குமே பதில் அளிக்காமல் ,சினிமா பாணியில் பேசி கொண்டு இருக்கிறார், ஒரு படத்தின் ஆடியோ லான்ச் போலத்தான் இருந்தது என்று தெரிவித்துள்ளார்

நடக்கும் குற்றங்களுக்கு திமுக மீது பழி

சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு திமுக டிஜிபி நியமிக்கவில்லை எனக் கூறுகிறார்.

ஒரே நாளில் எல்லாத்தையும் கிழித்து எறிந்துவிடுவேன் எனக் கூறிதானே ஆட்சிக்கு வந்தீர்கள்.

40 நாள்களில் உங்கள் காவல்துறை எதை கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரே நாளிலே 24 சம்பவங்காள் அதுவும் அனைத்தும் ஆளும் கட்சியே சார்ந்தவகளாலையே நடக்கிறது

அதை பற்றி எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை மாறாக , திமுக மீது பழிபோடுகிறார்கள் என்று முத்லவர் உரை குறித்து விளக்கம் அளித்தார்

சட்டப்பேரவை சினிமா தியேட்டராக மாறிவிட்டது

யார் தயவிலும் ஆட்சி செய்யவில்லை கூறும் முதல்வர் ஆட்சி அமைந்தவுடன் அதிமுகவின் ஒரு தரப்பினரை மட்டும் ஏன் சென்று பார்த்தீர்கள்.

முதலில் சோஃபா போனது, பின்னால் முதல்வர் போனார்.

ஒவ்வொரு கட்சித் தலைவரை சந்திக்க போகும்போதும் புது சோஃபா போனது இதற்கான அர்த்தம் என்ன என்று கேள்வியெழுப்பியுள்ளார்

இசை வெளியீட்டு நிகழ்ச்சி, டிரைலர் நிகழ்ச்சி பாணியை போல் இருந்தது முதல்வர் விஜய் உரை. சட்டப்பேரவையை சினிமா தியேட்டராக மாற்றிவிட்டனர். இன்று விசில் அடிக்கிறார்கள், விரைவில் அமைச்சர்கள் பாடல் போட்டு நடனமாடுவார்கள் எனத் தெரிவித்தார்.

==============================