DMDK Alliance With Which Party 2026 DMK, ADMK being tight-lipped on seat-sharing issue, speculation that DMDK will with TVK Vijay Source : Google
தமிழ்நாடு

DMDK: ’கறார் காட்டும் திமுக, அதிமுக’: விஜய் பக்கம் போகுமா தேமுதிக!

DMDK Alliance With Which Party 2026 : தொகுதி பங்கீடு விவகாரத்தில் திமுகவும், அதிமுகவும் கறாராக இருப்பதால், விஜய் பக்கம் தேமுதிக செல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

Kannan

தொகுதி பங்கீடு - விறுவிறுப்பு

DMDK Alliance With Which Party 2026 : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. தேமுதிக, ராமதாசை தவிர்த்து மற்ற கட்சிகள் எந்தக் கூட்டணி என்பது ஏறக்குறைய இறுதியாகி விட்டது.

தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி

திமுக, அதிமுகவை எதிர்க்கும் விஜய், தனித்து போட்டி என்பதில் உறுதியுடன் நிற்கிறார். வழக்கம் போல நாம் தமிழர் சீமானும் தனித்து களம் காண்கிறார். எனவே, தமிழக சட்டமன்ற தேர்தலில் நான்கு முனைப்போட்டி தான் இருக்கப் போகிறது.

தேமுதிகவுக்கு 6 இடங்கள் தான்

திமுக மற்றும் அதிமுகவிடம் தனித்தனியாக கூட்டணி தொடர்பாக தேமுதிக பேசி வருகிறது. அதிகபட்சமாக 6 இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என இந்த இரண்டு கட்சிகளும் தெரிவித்து விட்டதாக தெரிகிறது.

150 இடங்களுக்கு மேல் போட்டி

திமுகவும், அதிமுகவும் குறைந்தது 150 முதல் 170 இடங்களில் நேரடியாக போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. மீதமுள்ள இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு தர முடியும். தொடர்ந்து கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு உரிய இடம் தர வேண்டிய கட்டாயம் திமுக, அதிமுகவுக்கு இருக்கிறது.

தேமுதிக எதிர்பார்க்கும் தொகுதிகள்

தேமுதிக தரப்பில் குறைந்தது 15 முதல் 18 தொகுதிகளை எதிர்பார்க்கிறது. ஆனால் திமுக தரப்பில் 4 முதல் 5 தொகுதியும் ஒரு ராஜ்ய சபா சீட் மட்டுமே தர முடியும் என தெரிவித்துள்ளது. அதிமுக தரப்பில் இதே போல 6 சட்டமன்ற தொகுதியும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் தருவதாக தெரிவித்துள்ளது.

ஒற்றை இலக்கம் உறுதி காட்டும் திமுக, அதிமுக

எனவே ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீட் கொடுக்க முடியும் என இரண்டு கட்சிகளும் உறுதியாக தெரிவித்து விட்ட நிலையில், இரட்டை இலக்கம் இல்லாமல் கூட்டணிக்கு வர முடியாது என தேமுதிக தெரிவித்துள்ளது. திமுக மற்றும் அதிமுகவின் கதவு அடைக்கப்பட்டால் தேமுதிகவின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தவெக கூட்டணியில் தேமுதிக!

அந்த வகையில் பிரேமலதாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு தவெக கூட்டணி தான். அங்கு இரட்டை இலக்க தொகுதி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. திமுகவும், அதிமுகவும் கைவிட்டால், தேமுதிக விஜய் பக்கம் தான் செல்லும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

========