Anbumani Ramadoss has released PMK's final list of candidates. source : google
தமிழ்நாடு

திருமா, விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக வேட்பாளர்கள் யார் தெரியுமா? அன்புமணி வெளியிட்ட இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் !

பாமகவின் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

S Kavitha

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், பாமகவின் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் அறிக்கை

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் 23.04.2026-ம் நாள் நடைபெறவிருக்கும் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இறுதி வேட்பாளர் பட்டியல்

அவற்றில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 15 தொகுதிகளில் கீழ்க்கண்டவர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 3 பாமக வேட்பாளர்கள்

1. கீழ்வேளூர் - ச. வடிவேல் இராவணன்

2. அம்பத்தூர் - கே.என். சேகர்

3. செஞ்சி - அ. கணேஷ் குமார்

தற்போது வெளியிடப்பட்டுள்ள பாமகவின் இறுதி வேட்பாளர் பட்டியல்

1. பெரம்பூர் -ம. திலகபாமா

2. தருமபுரி - சவுமியா அன்புமணி,

3. விருத்தாசலம் - மருத்துவர் தமிழரசி ஆதிமூலம்,

4. சேலம் மேற்கு - மு. கார்த்தி,

5. பென்னாகரம் - பாடி வெ. செல்வம்,

6. போளூர் - சி.ஆர். பாஸ்கரன்,

7. திருப்போரூர் - வழக்கறிஞர் கே.பாலு,

8. ஜெயங்கொண்டம் - க. வைத்தி,

9. சேலம் வடக்கு - எஸ். சதாசிவம்,

10. விக்கிரவாண்டி - சி. சிவக்குமார்,

11. சோளிங்கர் - க. சரவணன்,

12. மயிலாடுதுறை சித்தமல்லி ஏ. பழனிச்சாமி,

13. உத்திரமேரூர் - பெ. மகேஷ்குமார்,

14. ரிஷிவந்தியம் - அ.ப. செழியன்,

15. காட்டுமன்னார் கோயில் (தனி) - மருத்துவர் அன்பு. சோழன்

விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக வேட்பாளர்

அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பாமக பொருளாளர் திலகபாமா போட்டியிடுகிறார்.

திருமாவிற்கு எதிராக களமிறங்கும் பாமக வேட்பாளர்

அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோவில் தனித் தொகுதியில் அவருக்கு எதிராக பாமக வேட்பாளர் அன்பு சோழன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.