https://x.com/DrTamilisai4BJP
தமிழ்நாடு

நாகரீகமாக பேச கற்றுக் கொள்ளுங்கள் : ஆ.ராசாவுக்கு தமிழிசை அறிவுரை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஆ ராசா தவறாக விமர்சித்திருப்பதை கண்டிப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

MTM

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் தள பதிவின் விபரம் :

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஆ ராசா தவறாக விமர்சித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.தமிழகத்தில் பாஜக பலம் பெறும் என்று அமித்ஷாவின் வார்த்தைகள் இவரை எவ்வளவு பதற்றம் அடைய செய்திருக்கிறது என்பது இவரது பேச்சில் வெளிப்படுகிறது.

டெல்லியில் வெற்றி பெற்றதை போல மகாராஷ்டிராவில் வெற்றி பெற்றது போல நிச்சயமாக இங்கே வெற்றியைத் தான் பெறப் போகிறோம். அங்கே உள்ளவர்களைப் போல இங்கே தனிப்பட்ட தலைவர்கள் அல்ல தங்கள் தலைவர்களுக்கு பின்னால் மாபெரும் இயக்கம் இருக்கிறது என்று இருமாப்போடு பேசுகிறார் .ஆம் அந்த மாபெரும் இயக்கத்தை தான் வெற்றி கொள்ளப் போகிறோம்.

வெட்கமில்லாமல்... ஜனநாயகத்தின் குரலை நெரித்த அவசரநிலை பிரகடனம் செய்த நாள் இன்று.. எந்த கட்சி அவசரநிலை கொண்டு வந்ததோ அந்த கட்சிக்கு அடிமையாகி அவர்களோடு கைகோர்த்துக்கொண்டு இன்று நீங்கள் செய்யும் அரசியல் நிச்சயமாக உடைத்து எறியப்படும்.

பழம்பெருமை பேசி இன்று தமிழ்நாட்டில் பரிதவித்துக் கொண்டிருக்கும் மக்களின் மோசமான நிலையை மறைத்து விட முடியாது. உங்கள் திராவிட மாடல் முதலமைச்சர்.. துணை முதலமைச்சர் வரும்பொழுது எப்படி ஏழைகளின் நிலைமை திரை சீலையிட்டு மறைக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். முதலில் நாகரீகமாக பேச கற்றுக் கொள்ளுங்கள் . நீங்கள் பயன்படுத்தும் வார்த்தையை பயன்படுத்தும் அளவிற்கு நாங்கள் கீழ் தரமானவர்கள் அல்ல. ஆனால் 2026 யார் அறிவாளிகள் என்பதை நிச்சயமாக உணர்த்தும். முடியாததையும் முடித்து காண்பிப்பது தான் அமித்ஷாவின் சாதனை. பார்க்கத்தான் போகிறீர்கள். பாரதப் பிரதமரின் நல்லாட்சியின் நீட்சி தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியின் மூலம் இங்கே வரத்தான் போகிறது.

இவ்வாறு அந்தப்பதிவில் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.