Annamalai on Manapparai Drunken School Teacher Issue 
தமிழ்நாடு

மதுபோதையில் ஆசிரியர் : மாணவர் எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு?

Annamalai on Manapparai Teacher Issue : திருச்சி மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஒன்றில் மதுபோதையுடன் வகுப்பறைக்கு ஆசிரியர் வந்தது குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

MTM

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவு :

Annamalai on Manapparai School Teacher: பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், மதுபோதையில் வகுப்பறைக்கு வந்திருக்கிறார் ஆசிரியர் ஒருவர்.

ஏற்கனவே, திருச்சி(Trichy) மாவட்டத்தில், வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் மாணவ மாணவியர் கல்வி கற்கும் நிலையில், தற்போது, ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளிக்கு வருவதென்பது, பள்ளிக் கல்வித் துறையின் அவலநிலையை வெளிக்காட்டுகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை, பள்ளிக் கல்வித் துறையில் வகுப்பறைகள் பற்றாக்குறை, அதல பாதாளத்தில் கிடக்கும் சட்டம் ஒழுங்கு என, திமுக அரசின் அனைத்துத் துறைகளுமே தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், சூப்பர் சிஎம் கையில் ஆட்சியைக் கொடுத்து விட்டு நாளொரு நாடகம் நடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இவை பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், மீண்டும் மக்களை ஏமாற்றக் கிளம்பிவிட்டார்.

உங்கள் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா முதலமைச்சர் அவர்களே? பள்ளி மாணவ, மாணவியர் எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு?

இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.