எரிபொருள் தட்டுப்பாடு அச்சம் குவிந்த வாகன ஓட்டிகள்
Petrol Diesel Shortage Rumours in Chennai Tamil Nadu : பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக நீண்ட வரிசையில் வாகனங்களுடன் பெட்ரோல் நிலையங்களில் குவிந்து வருகின்றனர் இந்த தேவையற்ற அச்சத்தால் அசாதாரண சூழல் நிலவி வருகிறது
தேவையற்ற வதந்தி
தேவையற்ற வதந்தியால் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் நீண்ட வரிசையில் நின்று மக்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி வருகின்றனர்.
சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பெட்ரோல் நிலையங்களை நோக்கிய வண்ணம் இருக்கின்றனர்.
மத்திய அரசு விளக்கம்
இதற்கிடையில் மத்திய அரசானது தற்போது அப்போரில் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் ,பொதுமக்கள் தேவையின்றி அச்சப்பட வேண்டாம் என்றும் சமையல் சிலிண்டர்களுக்கு தான் தட்டுப்பாடு இருப்பதாகவும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் கூறியுள்ளது.
21 நாட்களுக்கு எரிபொருள் கையிருப்பு
தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் 7,000 பெட்ரோல் பங்க்குகளில் 21 நாட்களுக்கு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் ,தற்போது சமையல் சிலிண்டர்களுக்கு தான் தட்டுப்பாடு நிலவி வருவதகவும் தெரிவித்துள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள்
வாகன ஓட்டிகள் அதிக அளவில் பெட்ரோல், டீசலை நிரப்பி செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம் என்று, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முரளி கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது