e-KYC mandatory for gas cylinders: ai
தமிழ்நாடு

கேஸ் சிலிண்டர் பெற e-KYC கட்டாயம்: 15ம் தேதிக்குள் முடிக்க கெடு..தவறினால் புக்கிங், மானியம் கட்?

மானிய விலையில் சிலிண்டர் வாங்கும் தகுதியை இழந்து, வணிக ரீதியிலான கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

Kavitha prasanna

e-KYC mandatory for gas cylinders: Deadline set for the 15th—risk of booking and subsidy suspension if missed?

சமையல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் ஆதார் அடிப்படையிலான e-KYC சரிபார்ப்பை முடிக்க எண்ணெய் நிறுவனங்கள் காலக்கெடு விதித்துள்ளன.

மின்னணுமுறை இணைப்பு

சமையல் கேஸ் சிலிண்டர் பெற வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண்ணை மின்னணு முறையில் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இறந்தவர்களின் பெயரில் உள்ள இணைப்புகள், போலி மற்றும் கூடுதல் இணைப்புகளைக் கண்டறிந்து நீக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

காலக்கெடு நிர்ணயம்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அடிப்படையிலான e-KYC சரிபார்ப்பை வரும் 15-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் காலக்கெடு விதித்துள்ளன. தவறும் பட்சத்தில் அரசு மானியம் நிறுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மானிய முறைகேடுகளுக்குத் தடை

மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்கள் உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குச் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் விநியோகம் ரத்து அபாயம்

e-KYC முடிக்காதவர்களுக்கு புதிய சிலிண்டர் புக்கிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம். மேலும், மானிய விலையில் சிலிண்டர் வாங்கும் தகுதியை இழந்து, வணிக ரீதியிலான கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

சரி ஏஜென்சிக்கு போகாமல் மொபைலில் e-KYC பதிவு செய்வது எப்படி?

  1. Play Store-ல் IndianOil One ஆப்-ஐ download செய்து கொள்ளுங்கள்.

  2. உங்க Lpg consumer id அல்லது மொபைல் நம்பர் உள்ளிட்டு Log In செய்துகொள்ளுங்கள்

  3. My Profile க்கு சென்று, கீழே ஸ்க்ரோல் செய்து ReKYC ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

  4. பின்னர் Face Scan கிளிக் செய்து, கேமராவைப் பார்த்து பச்சை நிறம் வந்ததும் ஒருமுறை கண்ணை சிமிட்டுங்கள்.

  5. உங்கள் புகைப்படம் கேப்சர் செய்யப்பட்டு, ஆதார் தகவல்கள் சரிபார்க்கப்படும்.

அவ்வளவுதான்! உங்கள் e-KYC வெற்றிகரமாக முடிந்தது. இதுவரைக்கும் நீங்கள் e-KYC பதிவு செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. நாளைக்கு ஒருநாள் இருக்கிறது. உடனே பண்ணிடுங்க!

=====