EC release of the final voter list in Tamil Nadu, women have emerged as a force to determine who will govern next google
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த யார் ஆட்சி? : ”பெண்கள் தான் கிங் மேக்கர்ஸ்” : அவர்கள் ஆதரித்தால் அரியணை!

SIR 2026 Final Voter List in Tamil Nadu : தமிழகத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியான நிலையில், அடுத்து யார் ஆட்சி என்பதை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள் உருவெடுத்து உள்ளனர்.

Kannan

இறுதி வாக்காளர் பட்டியல்

SIR 2026 Final Voter List in Tamil Nadu : தமிழகத்தில் வாக்காளர் தீவிர திருத்தப் பட்டியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்பிறகு, விடுபட்டவர்கள் பெயர்களை சேர்க்க அவகாசம் வழங்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது..

தமிழக வாக்காளர்கள் 5,67,07,380

அதன் அடிப்படையில், தமிழக அரசியலில் பெண்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக இருக்கிறது.

ஆண்களை விட பெண்கள் அதிகம்

ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2,77,38,925 ஆக உள்ளது. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2,89,60,838 மூன்றாம் பாலினத்தவர் 7,617 என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

74 லட்சம் பேர் நீக்கம்

மொத்தமாக 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட.. பெண் வாக்காளர்கள் அதிக அளவில் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

ஆட்சியை தீர்மானிக்கும் பெண்கள்

தமிழகத்தில் எதிர்வரும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் ஒரு முக்கியமான அரசியல் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறது. தமிழகத்தில் ஆண்களை விடப் பெண் வாக்காளர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

பெண்கள் கையில் அதிகாரம்

எனவே, கோட்டையில் அமரப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் 'நிர்ணய சக்தியாக' (Deciding Factor) ஆக பெண்கள் மாறி இருக்கிறார்கள்.

ஆண் வாக்காளர்களை விடப் பெண் வாக்காளர்கள் சுமார் 12.21 லட்சம் அதிகமாக உள்ளனர்.

கிட்டத்தட்ட 74 லட்சம் வாக்காளர்கள் பல்வேறு காரணங்களுக்காக (இறப்பு, முகவரி மாற்றம், இரட்டைப் பதிவு) நீக்கப்பட்ட பிறகும், தமிழகத்தில் பெண்களின் கையே ஓங்கி நிற்கிறது.

எங்கும், எதிலும் பெண்கள்

வாக்குகளை குறிவைக்கும் அரசியல் கட்சிகள் வாக்காளர் பட்டியலில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அவர்களுக்கான திட்டங்களை முன்வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டி இருக்கும்.

பெண்களுக்கான திட்டங்களை கூடுதலாக செயல்படுத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.

பெண்களுக்கான நலத் திட்டங்கள்

மகளிர் இலவசப் பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, முன்பு வழங்கப்பட்டதை போன்று மிக்ஸி, கிரைண்டர் போன்ற திட்டங்கள் பெண்களின் வாக்குகளைப் பெறுவதில் முக்கியப் பங்கு வகிக்க இருக்கின்றன.

இவற்றுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் சலுகைகளை அதிகரித்த வேண்டிய சூழலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளன.

பெண்கள் ஆதரவு இல்லாவிட்டால்....

தற்போதுள்ள சூழலில், எந்தவொரு அரசியல் கட்சியும் பெண்களின் ஆதரவு இன்றி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது தான் உண்மை. கல்வி, பாதுகாப்பு மற்றும் பெண்களின் கோரிக்கைகளே தேர்தல் அறிக்கைகளின் மையப்புள்ளியாக இருக்க போகிறது.

74 லட்சம் பெயர்கள் நீக்கம்

வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது ஒரு பெரிய சவாலாக இருக்க போகிறது. இதில் தகுதியான வாக்காளர்கள் யாரும் விடுபடவில்லை என்பதை உறுதி செய்வது தேர்தல் ஆணையத்தின் கடமை.

இடம் பெயர்ந்த பெண்கள் மற்றும் திருமணத்திற்குப் பின் ஊர் மாறிய பெண்களின் பெயர்கள் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது முக்கியமான கேள்வியாக எழுந்துள்ளது.

============