Edappadi K. Palaniswami, who takes name of the constituency, contesting from their in 6th time google
தமிழ்நாடு

Star Constituency : எடப்பாடி சட்டமன்ற தொகுதி : 6வது முறை களம் காணும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி!

வெற்றி பெற்ற தொகுதியின் பெயரையே அடைமொழியாக கொண்ட எடப்பாடி பழனிசாமி, 6வது முறையாக அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Kannan

அதிமுகவின் முகம்

எடப்பாடி கே. பழனிசாமி, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சர், பின்னர் முதலமைச்சர், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் என எல்லோராலும் அறியப்பட்டவர்.

எடப்பாடி கே. பழனிசாமி

இவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி எடப்பாடி. அதிமுகவில் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிவு வந்தபோது,1989ம் ஆண்டு ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் எடப்பாடியில், போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து, 'எடப்பாடி' பழனிசாமி என்று அடைமொழி பெற்றார்.

எடப்பாடியில் 5 முறை வெற்றி

2021 தேர்தல் வரை எடப்பாடியில் 7 முறை களம் கண்ட பழனிசாமி, 5 முறை வெற்றி பெற்றார்.

இரண்டு தேர்தல்களில் தோல்வி

1989க்கு பிறகு, 1991 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பழனிசாமி, 1996, 2006 ஆகிய தேர்தல்களில் தோல்வியை தழுவினார்.

எடப்பாடியில் ஹாட்ரிக் வெற்றி

அதேசமயம், 2011, 2016, 2021 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட அவர் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை வசமாக்கினார். எடப்பாடி தொகுதியில் விவசாயம் மற்றும் நெசவு பிரதான தொழிலாக உள்ளது.

ஆதிக்கம் செலுத்தும் சமுதாயத்தினர்

பலதரப்பட்ட சமுதாயத்தினர் வசித்லாமு,ஃ வன்னியர், கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தினர் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக திகழ்ந்து வருகிறார்கள்.

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகளுக்கு பின்பு எடப்பாடி தொகுதியில் 2.7 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 20 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு சுமார் 7 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடி நகராட்சியின் வளர்ச்சி

சேலம் மாவட்டத்தில் சாதாரண நகராட்சியாக இருந்த எடப்பாடி, 2011ம் ஆண்டுக்குப் பிறகு உட்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றது. எடப்பாடியில் கிராம சாலைகள் மேம்பாடு, புறவழிச் சாலை, அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் என வளர்ச்சி கண்டது.

சரபங்கா ஆற்றின் குறுக்கே மூன்று புது பாலங்கள், வனவாசியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, எட்டிக்குட்டை மேட்டில் கல்வியியல் கல்லூரி, எடப்பாடியில் அரசு கலைக்கல்லூரி, சுகாதாரமான குடிநீர் திட்டம் உள்ளிட்டவை பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப்பட்டன.

பொதுமக்களின் எதிர்பார்ப்பு

ரயில் நிலையம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சாலைகளை யை பெருக்கி, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், விடுபட்ட சாலைகளை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் தொகுதி மக்கள் முன்வைக்கின்றனர்.

பாமகவால் பலம் பெறும் பழனிசாமி

தொகுதியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கொண்ட பாமகவை, அதிமுக கூட்டணியில் சேர்த்ததன் மூலம் தனது வெற்றிக்கு அடித்தளம் அமைத்திருக்கிறார் பழனிசாமி.

சளைக்காத தேர்தல் எதிரிகள்

அதேசமயம், பலமான திமுக கூட்டணி ஒரு புறமும், தவெக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் இன்னொரு பிறமும் இருப்பதால், தேர்தல் களத்தில் அனல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

\எனவே, வெற்றிக்கனி என்பது பழனிசாமிக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது. அதேநேரம் அவரது அனுபவம், மக்களிடம் இருக்கும் செல்வாக்கு, சட்டமன்றத்திற்கு தடங்கல் இன்றி அழைத்து செல்லும் என்று தெரிகிறது.

=====