Edappadi Palanisamy on Ungaludan Stalin Scheme : சேலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது : அதிமுக ஆட்சியின் போது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின், அந்த மனுக்களை பெட்டியில் போட்டு சீல் வைத்து எடுத்துச் சென்றார்.
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் அந்த மனுக்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை(Ungaludan Stalin Scheme) கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் :
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்காக அரசு அதிகாரிகள் மூலம் வீடு வீடாகச் சென்று தந்திரமாக மக்களை ஏமாற்றி செல்போன் எண்களை பெற்று திமுக ஐடி-விங்குக்கு(DMK IT Wing) கொடுக்கப்படுகிறது.
மேலும் படிக்க : அரசு செய்தித் தொடர்பாளர்களாக 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்
2026 சட்டப்பேரவைத் தேர்தல் :
அதிமுக ஆட்சி (ADMK) அமைந்ததும் துறைவாரியாக திமுக செய்துள்ள ஊழல்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில்(TN Assembly Election) அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தில், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எழுச்சி மக்கள் மத்தியில் காண முடிகிறது.
இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில்(EPS Press Meet in Salem) தெரிவித்தார்.