Edappadi Palaniswami alleged that under DMK regime, women have been forced to protect themselves from DMK members Edappadi Palaniswami X Page(Twitter)
தமிழ்நாடு

திமுகவினரிடம் இருந்து பெண்களை காக்க வேண்டிய அவலம் : EPS காட்டம்

Edappadi Palaniswami on Women Safety in DMK Regime : திமுக ஆட்சியில் திமுகவினரிடம் இருந்து பெண்களை காக்க வேண்டிய அவலம் ஏற்பட்டு இருப்பதாக, எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்கிறார்

Kannan

பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

Edappadi Palaniswami on Women Safety in DMK Regime : விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பதவியை வைத்து அராஜகம்

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக செய்தி வந்துள்ளது.

"காவல்துறையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; நான் முக்கிய புள்ளி" எனக் கூறி, தனது திமுக பதவியை வைத்து கொண்டு இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பெண்களை பாதுகாக்க வேண்டிய அவலம்

திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்? அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபி முதல், பதவியை வைத்து கொண்டு கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள ஒன்றியச் செயலாளர் வரை, இந்த திமுக பாலியல் SIR-களைக் கூட கட்டுப்படுத்த கையாலாகாத தலைவராக தான் இந்த பொம்மை முதல்வர் இருக்கிறார்

தமிழகத்தை எப்படி காப்பாத்துவீங்க!

" தன் கட்சி காமுகர்களை ஒடுக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், நம் தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார்? உடனடியாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

ரௌடிகளின் ராஜ்ஜியமா சென்னை?

அதுபோல சென்னை பாரிமுனையில் கத்தியுடன் இரு கும்பல் மோதி கொண்ட விவகாரத்திலும் அவர் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் தமிழகம், குறிப்பாக தலைநகர் சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது” என எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.

====