Edappadi Palaniswami criticized DMK Manifesto on MK Stalin has given announcements that deceive the people google
தமிழ்நாடு

மக்களை ஏமாற்றும் அறிவிப்புகளை ஸ்டாலின் கொடுத்திருக்கிறார் – எடப்பாடி பழனிசாமி

Edappadi Palanisamy on DMK Manifesto : சிவகாசியில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, திமுக 525 வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட இன்னும் நிறைவேற்றவில்லை என்று திமுகவை குற்றம் சாட்டியுள்ளார்.

Rohini

525 வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றாத திமுக

Edappadi Palanisamy on DMK Manifesto : அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சிவகாசியில் நடைபெற்ற பரப்புரை பிரச்சாரத்தில் அவர் ,திமுக 525 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தது அதில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை.

இப்போது மீண்டும் ஏமாற்றுவதற்காக வாக்குறுதி கொடுத்துளளார் என்று விமர்சனம் செய்தார்

பெண்களின் பாதுகாப்பு ? திமுக விற்கு எடப்பாடி கேள்வி

திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் முதியோர் ,குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாக வேண்டிய ஒன்றாக உள்ளது என்றும் குறிப்பிட்டு பேசினர்.

அதிமுக ஆட்சியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு முற்றிலும் இருக்கின்றது என்று பிரச்சார பரப்புரையில் பேசினார்

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு

திமுக 525 வாக்குறுதிகள் கொடுத்தது. அதில் நான்கில் ஒரு பங்கை கூட திமுக அரசு நிறைவேற்றாமல் மீண்டும் இப்போது மீண்டும் அறிவிப்பு கொடுத்திருக்கிறார்.

குறிப்பாக கல்விக் கடன் ரத்து செய்யவில்லை, கேஸ் மானியம் கொடுக்கவில்லை, பெட்ரோல், டீசல் விலை குறைக்கவில்லை போன்ற அடுக்கடுக்கான வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி குற்றமன் சாட்டினார்

மீண்டும் மக்களை ஏமாற்றத்தான் இந்த அறிவிப்பு

மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்க்காகதான் இந்த அறிவிப்புகளை திமுக அரசு தெரிவித்து வருகிறது என பரப்புரையில் கூறிய அவர் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்த்தவில்லை. இப்போது மீண்டும் புது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இவையும் மக்களை ஏமாற்றும் அறிவிப்புகள் தான்” எனப் பேசினார்.

"Stalin has given announcements that deceive the people"