சட்டமன்ற தோ்தல் 2026
தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. தமிழகத்தில் சட்ட மன்ற தோ்தல் ஏப்ரல் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் நடைபெற வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
கூட்டணி, தொகுதி பங்கீடு
இதனால் இப்போது தமிழக கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவாரத்தை விறுவிறுபாக நடந்து வருகிறது.
திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை
ஏற்கெனவே திமுக- மற்ற கட்சிகளிடையே கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால், திமுக - காங்கிரஸ் இடையே இன்னும் பேச்சுவார்த்தை நிறைவு பெறவில்லை.
இந்நிலையில், அதிமுக எப்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.
எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடையே பேசிய அவர்,
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒன்றாக இணைந்து செயல்படுவது குறித்து அமித் ஷாவிடம் பேசியதாகவும், புதிய கட்சி தொடங்கியுள்ள சசிகலாவுடன் கூட்டணி வைப்பது குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.
பாஜக -அதிமுக எழுச்சியான கூட்டணி
திமுக - காங்கிரஸ் கூட்டணியில்தான் குழப்பம் உள்ளது. அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா? என்றே தெரியவில்லை. ஆனால் எங்களைப் பொறுத்தவரை, எங்கள் கூட்டணி சுமூகமான, எழுச்சியான கூட்டணியாகவே அமைந்துள்ளது என்றார்.