தமிழக சட்டமன்ற தேர்தல்
AIADMK Second Phase Candidate List 2026 : தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான, வேட்புமனு தாக்கல் 31ம் தேதி தொடங்குகிறது. திமுகவை போன்றே, அதிமுகவும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.
அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்தக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, போட்டியிடும் இடங்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டது.
அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்
அதிமுக சார்பில் 23 தொகுதிகளில் போட்டியிடும், முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, எடப்பாடி தொகுதியில் 7வது முறையாக எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார்.
முன்னாள் அமைச்சர்கள் 20 பேர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன.
இந்தநிலையில், 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டது.
கும்மிடிப்பூண்டி வி. சுதாகர், பொன்னேரி தனித் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பி. பலராமன் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். திருத்தணி தொகுதியில் முன்னாள் எம்பி கோ. அரி, திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா போட்டியிடுகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாதவரம் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் வி. மூர்த்தி, திருவொற்றியூர் முன்னாள் எம்எல்ஏ கே. குப்பன் களமிறக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் முக்கியமான தொகுதிகளுக்கு அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம், மதுராந்தகம் தனித் தொகுதிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மண்டலத்தில் முக்கியமான தொகுதிகளான ஓமலூர் தொகுதிக்கு ஆர். மணி, மேட்டூர் தொகுதிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி. வெங்கடாஜலம், கோபிசெட்டிப்பாளையம்வி.பி. பிரபு, பவானிசாகர் தனித் ஏ. பண்ணாரி போட்டியிடுகின்றனர்.
கோயம்புத்தூர் மாநகரில் முக்கியமான தொகுதிகளான கவுண்டம்பாளையம் பி.ஆர்.ஜி. அருண்குமார், கோயம்புத்தூர் தெற்கு அம்மன் கே. அர்ச்சுணன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடி முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், கன்னியாகுமரி முன்னாள் அமைச்சர் என். தளவாய்சுந்தரம் மீண்டும் களம் காண்கின்றனர்.
இரண்டாம் கட்டப் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் எனப் பலருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மொத்தம் 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. போடி தொகுதியில் முன்னாள் முதல் ஓபிஎஸ்-சை எதிர்த்து நாராயணசாமி, கோபி தொகுதியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை எதிர்த்து வி.பி. பிரபும் போட்டியிடுகிறார்கள்.
==========