Edappadi Palaniswami reply to Deputy Chief Minister Udhayanidhi Stalin's statement: source:google
தமிழ்நாடு

”அரசியல் கத்துக்குட்டி உதயநிதி" : தன் தாத்தாவிற்கு என்ன பட்டம் கொடுப்பார்? : எடப்பாடி காட்டமான விமர்சனம்

EPS on Udhayanidhi Stalin : உதயநிதி தன் தாத்தா கருணாநிதியை நேரடியாக விமர்சிக்க முடியாமல், என் பெயரைக் குறிப்பிட்டு தன் தாத்தாவைப் பற்றி பேசுகிறாரா? என பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

S Kavitha

Edappadi Palaniswami reply to Deputy Chief Minister Udhayanidhi Stalin's statement:

உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

பாரதிய ஜனதா கட்சியின் முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி பதிலடி

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழமிசாமி தனது சமூக வலை தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பகிர்ந்துள்ள அந்த பதிவில், ”பொன்னேரி சட்டமன்றத் தொகுதி மக்களின் சிறப்பான வரவேற்பிற்கு இடையே, எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.

தன் தாத்தாவிற்கு என்ன பட்டம் கொடுப்பார்?

என்னைப் பார்த்து, பாரதிய ஜனதாவுக்கு முரட்டு அடிமை என்று உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார் என்றால், அதே கூட்டணியில் இருந்த தன்னுடைய தாத்தாவைப் பார்த்து என்னவென்று சொல்வார்? என்ன பட்டம் கொடுப்பார்?

கருணாநிதியை விமர்சிக்க முடியாமல்

தன் தாத்தா கருணாநிதியை நேரடியாக விமர்சிக்க முடியாமல், என் பெயரைக் குறிப்பிட்டு தன் தாத்தாவைப் பற்றி பேசுகிறாரா?

அரசியல் கத்துக்குட்டி உதயநிதி

ஆக, அரசியல் கத்துக்குட்டி உதயநிதி ஸ்டாலின் தெரிந்து பேச வேண்டும்.

இன்று உலகின் பணக்காரக் குடும்பங்களுள் ஒன்றாக ஸ்டாலின் குடும்பம் இருக்கிறது. இப்படிப்பட்ட குடும்பத்தின் ஆட்சி தேவையா?

குடும்ப ஆட்சியை, வாரிசு அரசியலை வேரோடும், வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் வீழ்த்திடப் போகும் தேர்தல் தான் வருகின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தல்” என்று துணை முதலமைச்சர் பேச்சிற்கு பதிலளிக்கும் விதமாக எடப்பாடி பழானிிசாமி காட்டமாக பதிவிட்டுள்ளார்.