Edappadi Palaniswami started a statewide campaign 
தமிழ்நாடு

சுற்றுப்பயணம் தொடங்கினார் எடப்பாடி : விவசாயிகளுக்கு வாக்குறுதி

Edappadi Palanisamy Tour : அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவினாசி-அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

Kannan

Edappadi Palanisamy Tour in Coimbatore : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அதை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகளும் மும்முரம் அடைந்துள்ளன.

தேர்தலில் நான்கு முனைப்போட்டி? :

திமுக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக தலைமையில் மற்றொரு கூட்டணி, விஜய் மற்றும் சீமான் தனித்து போட்டி இப்படி அமைந்தால், தேர்தலில் நான்கு முனைப் போட்டி இருக்கும்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி(Edappadi Palanisamy), ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற சுற்றுப் பயணத்தை கோவை மாவட்டத்தில் இன்று தொடங்கினார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அடுத்தடுத்து அவர் பயணம் மேற்கொள்வார்.

சுற்றுப்பயணம் தொடக்கம் :

மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உள்பட்ட தேக்கம்பட்டி வன பத்திரகாளி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து தனது சுற்றுப் பயணத்தை எடப்பாடி(EPS Tour) தொடங்கினார். இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி(SP Velumani) மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். பாஜக சார்பில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மக்களை சந்தித்து குறைகள் கேட்பு :

இந்தப் பயணத்தின்போது, கூட்டணிக் கட்சி தலைவர்களை அவர் சந்திக்கிறார். ஒவ்வொரு தொகுதிகள் வாரியாக பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிகிறார். அப்போது, திமுக அரசின் குறைகளை சுட்டிக் காட்டுவதுடன், அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை எடுத்து கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி.

விவசாயிகளுக்கு வாக்குறுதி :

விவசாயிகளுடன் கலந்துரையாடிய அவர், 2026ல் அதிமுக ஆட்சி அமைக்கும்(TN Election 2026) என்று உறுதிபடக் கூறினார். விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த அவர், அத்திக்கடவு அவினாசி திட்டம் அதிமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

=====